திங்கள், 30 ஜூன், 2014

நடிகை மஞ்சுவாரியரின் கதையில் ஹனி ரோஸ் நடித்தது ஏன்?



முதல் கனவே, ‘சிங்கம் புலி, ‘மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹனிரோஸ். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிப்புடன் உடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். இதற்காக டிசைனிங் வகுப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்ததால் தள்ளிப்போனது. தற்போது அதற்கான நேரத்தை ஒதுக்கி இருக்கிறார். ஊட்டியில் உள்ள கல்லூரியில் டிசைனிங் வகுப்பில் ஹனிரோஸ் சேர்ந்திருக்கிறார். இதற்காக 3 மாதம் புதிய படங்களுக்கு கால்ஷீட் வழங்கவில்லை. இது பற்றி அவர் கூறும்போது, ‘நீண்ட நாட்களுக்கு முன்பே டிசைனிங் வகுப்பில் சேர்வதற்கு எனது பெயரை பதிவு செய்துவிட்டேன். இப்போது இதை தவறவிட்டால் அடுத்த வருடம்வரை நான் காத்திருக்க வேண்டும் என்றார். மேலும் அவர் நடித்து சமீபத்தில் வெளியான ரிங்மாஸ்டர் என்ற படத்தில் நடிகை மஞ்சுவாரியரின் நிஜவாழ்க்கை கதையில் நடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி அவரிடமே கேட்டபோது, ‘என்னிடம் இதுவரை நேரடியாக யாரும் இதுபோல் கேட்கவில்லை அது பற்றி யோசிக்கப்போவதும் இல்லை. யார் வேண்டுமானலும் எதையும் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. எனக்கு வேடம் கொடுக்கப்பட்டது. நடித்தேன். அவ்வளவுதான். மற்றபடி யாரைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்றார். - See tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக