ஞாயிறு, 13 ஜூலை, 2014

பாரிமுனையில் பயங்கர தீ விபத்து ( படங்கள்

சென்னை பாரிமுனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்தால்  பாரிமுனையில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. தீணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.  கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்ததால் பாரிமுனை புகை மண்டலமாக மாறியது. வங்கியின் 2வது தளத்தில் மின்கசிவு காரணமாக  தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. பற்றி எறியும் தீயில் கணிப்பொறி மற்றும் மின்சாதனங்கள் வெடித்து சிதறின. பாரிமுனையில் உள்ள பாரம்பரிய கட்டிடத்தில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. தீ விபத்தால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.    பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என வங்கி அதிகாரி தெரிவித்தார். nakkheeran.in


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக