திங்கள், 28 ஜூலை, 2014

இந்திய நதிகள் இணைப்பு திட்டம்: வரைவு திட்டம் தயாரிக்க அரசு உத்தரவு !


புதுடில்லி:நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான, வரைவு திட்டத்தை தயாரிக்கும்படி, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு, குடிநீர் வழங்கல் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.வாஜ்பாய் தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில், நதிகள் இணைப்பு திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்டது. அதன்பின், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் இது தொடர்பாக எந்த உத்தர வும் பிறப்பிக்கப்படவில்லை.இந்நிலையில், கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. நம்மளுக்கு என்னவோ இதில் பெரிய சந்தேகங்கள் உண்டு, பொதுவாகவே பெரிய பெரிய திட்டங்களுக்கு பின்னால் பெரும் தரகர் காபறேட்டுகள் இருப்பது வழக்கம், குஜராத்துக்கு நீர் வேண்டுமென்று சர்தார் சரோவர் அணைக்கட்டு கட்டினார்களே . அப்போது  நர்மதா நதிக்கரை ஓரம் வாழ்ந்த பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே இரவில் நாடோடிகளானார்கள். அவர்களின் வாழ்க்கை இப்போது எப்படி என்பதை பற்றி மீடியாக்கள் முச்சு விடுவதில்லை. முதல்ல அதைபற்றி படிங்க


தற்போது, மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்றுள்ளதை தொடர்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
நிதின் கட்காரி தலைமையிலான, மத்திய குடிநீர் வழங்கல் துறை அமைச்சகம், உமா பாரதி தலைமையிலான நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு, சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள தாவது:பல மாநிலங்களில் போதிய பருவமழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்கு போய் விட்டது. அந்த மாநிலங்களில், குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தேவையான தண்ணீர் இல்லாமல் வறட்சி நிலவுகிறது. ஆனால், ஒரு சில மாநிலங்களில், ஏரளாமான நதி நீரும், மழை நீரும் கடலில் கலந்து வீணாகின்றன.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கான வரைவு திட்டத்தை உடனடியாக தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், நதிகள் இணைப்பு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 'கேரளா வழியாக பாயும் நதிகளை, தமிழகத்துக்கு திருப்பி விட்டால், கேரளாவின் பசுமையும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படும்' என, கேரள அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக