திங்கள், 28 ஜூலை, 2014

நிதின் கத்காரி வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் ! வல்லவனுக்கு வல்லவனா ?

புதுடெல்லி மத்திய மந்திரி கட்காரி வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
அதிநவீன உளவு கருவி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசில் சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக இருப்பவர் நிதின் கட்காரி. இவர் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத்தலைவரும் ஆவார். கட்டிபிடித்து போஸ் கொடுத்துகொண்டே வெட்டி வீழ்த்தி விடுவது MGR  இஸ்டயைலுங்கோ !

இவர் டெல்லியில், எண்.13, தீன்மூர்த்தி லேன் இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த இல்லத்தில் அதிநவீன உளவு பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்செயலாகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உடனடியாக அவற்றை துண்டிக்க உத்தரவிடப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
பிரதமருக்கு தகவல் இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் ஆகியோரிடம் நிதின் கட்காரி தகவல் தெரிவித்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில், இந்த உளவு கருவிகள் அதிநவீனமானவை என்பதால், இவை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த உளவு பார்க்கும் அமைப்பு ஒன்றினால்தான் ரகசியமாக கட்காரியின் வீட்டில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
‘வாஷிங்டன் போஸ்ட்’ அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. என்னும் மத்திய புலனாய்வு முகமை, என்.எஸ்.ஏ. என்றழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு முகமை ஆகிய அமைப்புகள்தான் இந்த அதிநவீன உளவு பார்க்கும் கருவிகளை பயன்படுத்தி வருகின்றன.
பல்வேறு நாடுகளில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் பற்றிய உளவு தகவல்களை அமெரிக்கா திரட்டியது பற்றி அதிரடி தகவல்களை சி.ஐ.ஏ.யின் முன்னாள் ஏஜெண்டு எட்வர்டு ஸ்நோடன் கசிய விட்டது குறித்து கடந்த மாதம் 30–ந் தேதி ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு செய்தி வெளியிட்டது. அதில், ‘‘அமெரிக்க முன்னணி உளவு அமைப்பு, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களை தீவிரமாக உளவு பார்த்து வருகிறது’’ என கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வேறு தலைவர்கள்? இந்த நிலையில் நிதின் கட்காரி வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்ற தகவல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த கருவிகளை துண்டித்து, கைப்பற்றிய இந்திய பாதுகாப்பு முகமைகள், இதில் வெளிநாட்டு தொடர்பு குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளன.
நிதின் கட்காரியுடன் வேறு எந்த பாரதீய ஜனதா தலைவர் வீடுகளிலாவது இப்படி நவீன உளவு பார்க்கும் கருவிகள் ரகசியமாக பொருத்தப்பட்டுள்ளனவா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முதல் முறையல்ல பாரதீய ஜனதா தலைவர்கள் உளவு பார்க்கப்படுகின்றனர் என்ற தகவலை ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு வெளியிட்டபோதே, அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது நினைவுகூரத்தக்கது.
இந்தியாவில் மத்திய மந்திரி ஒருவரது வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முதல் முறையல்ல. 2011–ம் ஆண்டு ஜூன் மாதம் பிரணாப் முகர்ஜி நிதி மந்திரியாக இருந்தபோது அவரது அமைச்சக அலுவலகத்திலும், 2012–ம் ஆண்டு ராணுவ மந்திரியாக இருந்த ஏ.கே.அந்தோணி அலுவலகத்திலும் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தின.
காங்கிரஸ் கருத்து இப்போது நிதின் கட்காரி இல்லத்தில் உளவு பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கருத்து தெரிவிக்கையில், ‘‘மூத்த மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான நிதின் கட்காரியின் வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன என்ற தகவல் சரியானது என்றால் இது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினை ஆகும். இது மந்திரிகளிடையே நம்பிக்கையின்மையையும், பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் போனதையும் காட்டுகிறது. இது குறித்து தகவல்களை கட்காரியும், பாரதீய ஜனதா கட்சியும், மத்திய அரசும் வெளியிட்டு தாங்கள் குற்றமற்றவர்கள் என காட்ட வேண்டும். யாருடைய தூண்டுதலின் பேரில், யார் அதிகாரம் வழங்கியதின் பேரில் உளவு பார்க்கப்பட்டுள்ளது, இதன் பின்னணி என்ன என்பதையெல்லாம் பாரதீய ஜனதா கட்சியும், பிரதமரும், உள்துறை மந்திரியும் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி, ‘‘இது குறித்த தகவல்கள் எப்படி அம்பலத்துக்கு வந்தன? இது குறித்து விசாரணை நடத்தி அனைத்து உண்மைகளையும் பாராளுமன்றத்தில் வைக்கவேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, ‘‘இது ஒரு முக்கியமான பிரச்சினை. எப்படி கட்காரியின் தனி அறைக்குள் ஒருவர் உரிய அனுமதியின்றி நுழைய முடிந்தது?’’ என கேள்வி எழுப்பினார்.
சுப்பிரமணியசாமி கருத்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக நான் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில், எனக்கு கிடைத்த தகவல்கள்படி, கடந்த ஆண்டு அக்டோபருக்கு முன்பாகவே இது நடந்திருக்க வேண்டும் (உளவு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்). அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசுதான் மத்தியில் இருந்தது. அமெரிக்க பாதுகாப்பு முகமை என்.எஸ்.ஏ., பாரதீய ஜனதாவையும், கட்காரியையும் குறி வைத்திருந்தது’’ என குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்காரி மறுப்பு ஆனால் தனது வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை நிதின் கட்காரி மறுத்துள்ளார்.
இவை ஊகத்தின் அடிப்படையில் வெளியான தகவல்கள் என அவர் கூறியுள்ளார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக