திங்கள், 28 ஜூலை, 2014

சீனாவின் முப்பது வீத செல்வம் ஒரு சதவீதம் பேரிடம் குவிந்துள்ளது !

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியான சீனாவின் செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதி, வெறும் ஒரு சதவீத பணக்காரர்களிடம் குவிந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அந்நாட்டின் பீக்கிங் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2012-ஆம் ஆண்டு சீனக் குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு 4,39,000 யுவான்கள் (சுமார் ரூ.42.58 லட்சம்) ஆகும். 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகம். உயர்நிலையில் உள்ள ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே, சீனாவின் செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதி குவிந்துள்ளது. கீழ்நிலையில் உள்ள 25 சதவீத மக்களிடம், நாட்டின் செல்வத்தில் வெறும் 10 சதவீதம் மட்டுமே உள்ளது dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக