சனி, 12 ஜூலை, 2014

இந்தியாவில் தெருவோர உணவகங்கள் சுற்றுலா விடுதிகளை விட சுத்தமானவை ! ஆஸ்திரேலிய ஆய்வு !

தெருவோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் சுகாதார மற்றவை, உடலுக்குக் கேடு விளைவிப்பவை என்ற கருத்து தவறாகிவிடும்போல் இருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல உணவு வரலாற்று ஆய்வாளர் சார்மைன் ஓ பிரெய்ன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்திய உணவு வகைகளைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.
அதில், இந்திய சுற்றுலா விடுதி களில் வழங்கப்படும் உணவு களைக் காட்டிலும், சாலையோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் பாதுகாப்பானவை என்று அவர் கூறியிருக்கிறார்.
‘தி பெங்குயின் புட் கைடு டூ இந்தியா’ என்ற புத்தகத்தை சார்மைன் ஒ பிரெய்ன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘இட்ஸ் நாட் கர்ரி- ஈட்டிங் இந்தியா’ என்ற தலைப்பில் உள்ளவை குறித்து, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த, ஆஸ்திரேலியா இந்தியா நிறுவனத்தில் (ஏஐஐ) விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதில் சார்மைன் பேசும் போது, “இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவு விற்பனையாளர்கள், உணவுக ளைக் கூவி விற்போர் பெரும் பாலும் புத்தம்புதிய உணவுப் பொருள்களைப் பயன்படுத்திச் சமைக்கப்பட்ட புத்தம்புதிய உணவுகளைத் தருகின்றனர்.
அதேசமயம், சாலையோர உணவுகள் நபருக்கு நபர் வேறுபடும். ஆகவே, உண் பவர்கள் தங்களின் உள்ளுணர்வு சொல்வதைப் பின்பற்றலாம்” என்றார்.
அவரின் புத்தகத்தில், இந்திய உணவுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை விவரித்துள்ளார். நான்கு ஆண்டு ஆய்வுக்குப் பிறகு இப்புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
செட்டிநாட்டு உணவு
அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவின் பிராந்திய உணவுகள், உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் விதவிதமாக தயாரிக்கப்படுகின்றன. அவை. வரலாறு, கலாச்சாரம், மதம், பொருளாதார நிலை மற்றும் தட்பவெப்பம் சார்ந்தவை.
வணிகம் கூட உணவு வகை களில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியிருக்கிறது. மதுரையி லுள்ள செட்டிநாட்டு உணவு வகை களில் பெருஞ்சீரகம், கொத்து மல்லி, கிராம்பு, லவங்கம் உள் ளிட்ட விலையுயர்ந்த நறுமணப் பொருள்கள் பயன்படுத்தப்படு கின்றன. வர்த்தகத்தால் அப்பகுதி மக்கள் செழிப்பாக இருந்ததையே இது பிரதிபலிக்கிறது.
கட்ச் உணவு
குஜராத்தின் கட்ச் போன்ற வறட்சிப் பகுதிகளில் சோள வகைகள் அதிகம் கிடைப்பதால், அங்கு உணவுகளில் சோளம் அதிகம். அப்பகுதி மக்கள் பெரும்பாலும் கால்நடை மேய்ப்பர்கள். ஆகவே, அவர்கள் பால்பொருட்களான நெய் போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்கின்றனர். அந்த பருவநிலைக்கும் அவை ஏற்றவையாக உள்ளன.
இனிப்பு
இனிப்பு வகைகளில் பெரும்பாலானவற்றில், மத்திய கிழக்கின் பூர்விகச் சாயல் இருக்கிறது. அரபு வணிகர்கள், இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்களிடமிருந்து அந்த இனிப்பு வகைகள் பரவியிருக்கக் கூடும்.
இந்தியா முழுக்க ஏராளமான உணவு வகைகள் உள்ளன. வெளி நாட்டவர்களுக்கு அதைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை.
வெளிநாடுகளில் உள்ள இந்திய உணவு விடுதிகள் பெரும் பாலும் சிக்கன் டிக்கா, காரமான குழம்பு வகைகளையே விநியோ கிக்கின்றன.
அவைதான் இந்தியாவின் தேசிய உணவு என்பதைப் போல உருவகமாகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக