திங்கள், 28 ஜூலை, 2014

4 மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது ! a short story !

புதுடெல்லி, 4 மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்ட மூன்று நாள் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வருட இறுதியில் அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடபெற உள்ளது. இந்த தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடாது என்று அறிவித்துள்ளார்.
மேலும், ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள பஞ்சாப் இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மட்டும் ஆம் ஆத்மி அக்கறை காட்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும்படி ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் டெல்லியில் சட்டமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.dailaythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக