திங்கள், 28 ஜூலை, 2014

Apple கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மூன்றில் ஒருவர் இந்தியர்.

நியூயார்க், ஜூலை 28–
ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. இங்கு மொத்தம் 12 ஆயிரம் பேர் என்ஜினீயர்களாகவும், டிசைனர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களாகவும், விற்பனையாளர்களாகவும் உள்ளனர். இந்த நிலையில் அங்கு பணிபுரியும் என்ஜினீயர்கள் 3 பேரில் ஒருவர் இந்தியர் ஆவார். இந்த தகவலை எச்.எப்.எஸ். ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2001–2010 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் 1750 எச்–1பி விசா மூலம் வெளிநாட்டு என்ஜினீயர்களை பணியில் அமர்த்தி இருந்தது. 2011–2013–ம் ஆண்டுகளில் அது 2800 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு பணியில் உள்ள வெளிநாட்டு என்ஜினீயர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். இவர்கள்தான் ஐபோன் மற்றும் ஐபேடு தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இவர்கள் எச்–1 பி அல்லது கிரீன்கார்டு விசா மூலம் பணியில் உள்ளனர். அதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த 5 மென் பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. அதில் 4 பெரிய நிறுவனங்களும், ஒரு சிறிய நிறுவனமும் அடங்கும்.
கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் அவுட் சோர்சிங் பணிகளை இந்தியாவில் அதிக அளவில் வழங்கியுள்ளது என்றும் எச்.எப்.எஸ். ஆராய்ச்சி மைய தலைமை தொகுப்பாளர் பரீக் ஜெயின் தெரிவித்துள்ளார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக