ஞாயிறு, 13 ஜூலை, 2014

தமிழ் அச்சுக்கூடத்தை நிறுவியவர் சீகன் பால்கு தமிழகம் வந்த 308ம் ஆண்டு தின விழா -

தரங்கம்பாடி:சீகன் பால்கு தரங்கம்பாடி வந்த 308ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நாகை மாவட்டம் தரங்கம்பாடிக்கு ஜெர்மனியை சேர்ந்த பர்த்தல மேயு சீகன்பால்கு, நண்பர் ஹென்றிக் புளுச்சோவுடன் 1706ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி கடல் மார்க்கமாக  வந்தார். தரங்கம்பாடியில் தங்கி மத போதகராக இருந்து பிரசாரம் செய்ததோடு, பெண் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்மொழி மீது பற்றுக்கொண்டு தமிழ் படித்த அவர், தமிழில்  அச்சுக்கூடத்தை உருவாக்க முயற்சி எடுத்து இந்தியாவிலேயே முதன்முறையாக தரங்கம்பாடியில் தமிழ் அச்சுக்கூடத்தை நிறுவினார்.
அவர் தரங்கம்பாடி வந்த வந்த ஜூலை 9ம் நாளை தமிழ் சுவிசேஷ லூத்தரன் சபையினர் மிசியோன் தோத்திர திருநாளாக கொண்டாடுகின்றனர். அவர் வருகை தந்த 308ம்  ஆண்டு தின விழா தரங்கம்பாடி கடற்கரையில் கொண்டாடப்பட்டது. கடற்கரையில் உள்ள சீகன்பால்கு நினைவிடத்தில் இருந்து சபை குருக்கள், மாணவ, மாணவிகள் ஊர்வலமாக வந்து ராஜவீதி, ராணிவீதி சந்திப்பில் உள்ள சீகன்பால்கு முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக