ஞாயிறு, 13 ஜூலை, 2014

தப்பியோட முயன்ற தொழிலாளர்களின் கையை வெட்டி தண்டனை கொடுத்த முதலாளி. ஆந்த்ராவில் கொத்தடிமைகள் !

வேலை பிடிக்காமல் தப்பியோட முயன்ற தொழிலாளர்களின் கையை வெட்டி தண்டனை கொடுத்த முதலாளி. கொடுமையான  சம்பவம்
140516643313aஆந்திர மாநிலத்தில் ஐதராபாத் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் செங்கல் சுள்ளையில் கொத்தடிமையாக வேலைபார்த்த சிலர் தப்பிக்க முயன்ற குற்றத்திற்காக வலது கையின் ஒரு பகுதியை வெட்டி கொடுமையான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த தகவல் தற்போதுதான் தெரியவந்துள்ளதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் இன்னும் அடிமைத்தனம் மட்டும் ஒழியவில்லை என்பதற்கு அவ்வப்போது ஒருசில எடுத்துக்காட்டு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஐதராபாத்தின் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் உள்ள செங்கல்சுள்ளையில் ஒரிசாவில் இருந்து பிழைக்க வந்த ஒரு கும்பல் வேலைபார்த்து வந்தது.
மிகவும் கடினமான வேலையாக இருந்ததாலும், கூலி சரியாக கிடைக்காததாலும், அங்கிருந்து 12 பேர் கொண்ட ஒரு குழு தப்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களுள் மூன்று பேர் செங்கல்சுள்ளை முதலாளியிடம் பிடிபட்டனர்.

_74979527_624-bricks_74972939_brick-layingபிடிபட்ட மூன்று பேர்களிடமும் செங்கல்சுள்ளை முதலாளி, “ஒரு கை, ஒரு கால் அல்லது உயிர் மூன்றில் எதை இழக்க விரும்புகிறாய் என்று கேட்டுள்ளார். மூவரும் கைகளை இழப்பதாக ஒப்புக்கொண்டவுடன் கோடாரியால் மூவரின் வலது கையையும் வெட்டி குப்பையில் எறிந்துள்ளார் அந்த ஈவு இரக்கமற்ற செங்கல்சுள்ளை முதலாளி.
ஒரு கையை இழந்த துக்கத்தோடு மீண்டும் ஒரிஸ்ஸா வந்து பிழைப்பதற்கும் வழியில்லாமல் இருப்பதாக தற்போது வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த ஒரிஸ்ஸாவில் உள்ள சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் ஆந்திர, ஒரிஸ்ஸா எல்லைப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. ilakkiya.info

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக