புதன், 18 ஜூன், 2014

ரஞ்சிதா நித்தியானந்தா திருப்பதியில் தரிசனம் பண்றாங்கோ ! பேஷா பண்ணுங்கோ காதலுக்கு நாம எதிரியில்லை !

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா.
இவர் சாமியார் நித்யானந்தாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது. நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டன. கர்நாடக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதற்கிடையே தனக்கும், நித்யானந்தாவுக்கும் இடையே குரு– பக்தை உறவு மட்டுமே இருப்பதாகவும், சிலர் தேவையில்லாமல் அவதூறு கிளப்பி வருவதாகவும் ரஞ்சிதா கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் சாமியார் நித்யானந்தாவின் பிறந்தநாளில் அவரிடம் முறைப்படி தீட்சிதை பெற்று ரஞ்சிதா சன்னியாசியானார்.
இந்த நிலையில் சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட சீடர்களுடன் திருப்பதியில் இன்று காலை சாமி கும்பிட்டார்.
அவர் தங்க நகைகளை கழுத்தில் அணிந்து இருந்தார். அங்குள்ள பக்தர்கள் அவரை கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிவிட்டு நித்யானந்தா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக