ஞாயிறு, 29 ஜூன், 2014

ஆன்லைன் ஷாப்பிங் அசுர வளர்ச்சி ! இந்திய ஷாபிங் மால்கள் திணறல் !

மும்பை . நகர்புற வாசிகளை பெரியளவில் ஈர்த்துள்ள ஆன்லைன் ஷாப்பிங் கலாச்சாரம் அபரிமிதமாக வளர்ந்து வருவதால் அடுத்த இரண்டு ஆண்டிற்குள் இணையதளம் வழியாக பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக, மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள், கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதை காட்டிலும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதில் பல சலுகைகள் கிடைக்கிறது. குறிப்பாக, விலையில் அதிகபட்ச தள்ளுபடி, நேரம் செலவிடுதல் குறைவு, வீட்டிலிருந்து கொண்டே பொருட்களை பெறும் வசதி ஆகியவை பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், முன்பை விட இப்போதெல்லாம் சிறிய நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் கூட இணையதள வசதிகள் வந்துவிட்ட நிலையில், அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
மொபைல் போன்களில் இன்டர்நெட் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கூட ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாஸ்டன் கன்சல்டன்சி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், 2013-ல் 6 சதவீதமாக இருந்த ஆன்லைன் ஷாப்பிங் 2016-க்குள் 14 சதவீதம் வரை உயரும் என்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், நாட்டில் தற்போது இயங்கி வரும் சுற்றுலா நிறுவனங்களில் 25 சதவீதம் ஆன்லைனுக்கு மாறிவிட்டதாக தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக பிளிப்கார்ட், அமேசான், ஸ்நாப் டீல் போன்ற வர்த்தக தளங்களில் விற்பனை அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களும் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக