திங்கள், 30 ஜூன், 2014

CM ஜெயலலிதாவின் வருகைக்காக மீட்பு பணி நிறுத்தப்பட்டது ! மரண அவஸ்தையில் மனிதர்கள் ! விளம்பரம் தேடி ஷோ காட்டும் ...

சென்னை, மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், மூன்று பெண்கள் உட்பட, 13 கட்டடத் தொழிலாளர்கள் பலியாயினர் என்பது இதுவரை உறுதியாகி உள்ளது. மேலும், 58 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.இந்த நிலையில், தொடர்ந்து, விரைவாக நடக்க வேண்டிய மீட்புப் பணி, முதல்வர் வருகைக்காக பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இடையில், 10 நிமிடம் பெய்த ஆலங்கட்டி மழையும் பணிகளை பாதித்தது மீட்பு பணி நேற்று முன்தினம் மாலை, 4:45 மணிக்கு கட்டடம் இடிந்து விழுந்ததில் இருந்து நடந்து வந்த மீட்புப் பணி, நேற்று அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது. அதில், 32 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில், 11 பேர் இறந்து விட்டனர்; 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று காலை, 5:00 மணிக்கு மீண்டும் துவங்கப்பட்ட மீட்புப் பணி, நேற்று பிற்பகல், 2:00 மணி வரை நடந்தது. அப்போது, முதல்வர் பார்வையிட வருவதாக தகவல் கிடைத்ததால், மீட்புப் பணி நிறுத்தப்பட்டது. வீடியோ கான்பரன்ஸ் மூலமே ஆட்சி நடத்துவதும் காணொளி முலம் தமிழத்தின் சகல கட்டிடங்களிலும் தனது பெயர் பலகையை கொஞ்சம் கூட வெட்கம் இன்றி ரிமோட் கண்ட்ரோல் முலம் திறந்து வைத்து தனது அல்பதனமான அகம்பாவத்துக்கு சதா தீனி போடும் வாய்தா ராணி இதற்கு மட்டும் ஏன் கானொளியில் ஆறுதல் கூறி இருக்கலாமே . இடிபாடுகளுக்குள் சிக்கினவர்களுக்கோ மரண வேதனை ஒவ்வொரு செக்கன் களும் வாழ்வா சாவா ! ஜெயலலிதாவுக்கு மக்சிமம் விளம்பரம் தேவை ! அவரிடம் அது மட்டும்தானே இருக்கிறது
தொடர்ந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்களில், பெரும்பாலானோர், முதல்வர் வரும் வழியில், சாலையை சீர்படுத்தும் பணிக்கு அனுப்பப்பட்டனர். இடிபாடுகளை சரி செய்து, கட்டுமானப் பணிக்கு வைத்திருந்த மணலைக் கொட்டி, முதல்வர் வர, தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.மீட்கப்பட்டவர்கள், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை நுழைவு வாயிலில், சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களை, உறவினர்களுக்கு தெரிவிப்பதற்காக, உதவி மையம் திறக்கப்பட்டது. காயமடைந்தோரை சந்தித்து, ஆறுதல் கூற, மருத்துவமனைக்கு முதல்வர் வருவதாக, தகவல் வெளியானதும், அங்கிருந்த உதவி மையம் அகற்றப்பட்டது. இதனால், உறவினர்கள் விவரம் அறிய முடியாமல் அவதிப்பட்டனர். மழை இதற்கிடையில், பிற்பகல், 3:45 மணிக்கு ஆலங்கட்டி மழை பெய்யத் துவங்கியது. 10 நிமிடம் பெய்த இந்த மழையைத் தொடர்ந்து, 20 நிமிடங்கள் கன மழை பெய்தது. அதன் பின் அரை மணி நேரம் தூறல் இருந்தது. முதல்வர் வருகைக்காக பணிகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டதால், ஆலங்கட்டி மழையால் மீட்புப் பணி ஊழியர்கள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை.மாலை, 4:45 மணிக்கு மீட்புப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டன. பின், மாலை, 6:03 மணிக்கு முதல்வர் சம்பவ இடத்திற்கு வந்தார். முதல்வரிடம், 'நீங்கள் வந்ததால், மீட்புப் பணி, இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறதே?' என, நிருபர்கள் கேட்டதற்கு, ''இது அரசியல் உள்நோக்கம் கொண்ட கேள்வி. இந்த கேள்விக்கு, பதில் தயார் செய்து வரவில்லை. நீங்கள் இங்கேயே இருந்து பாருங்கள்; பணிகள் எவ்வளவு துரிதமாக நடந்து வருகிறது என்பதை பாருங்கள்,'' என்றார்.மீட்பு பணியை பார்வையிட, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை, 6:03 மணிக்கு, அங்கு சென்றார். அவரிடம் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கை குறித்து விளக்கினர்.ஆந்திராவில் இருந்து வந்திருந்த அதிகாரிகளையும், முதல்வர் சந்தித்து பேசினார். பின், 6:20 மணிக்கு, முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெறுவோரை சந்தித்து, ஆறுதல் கூறிவிட்டு, 6:43 மணிக்கு, போயஸ் கார்டன் புறப்பட்டு சென்றார்.பின், முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கட்டட விபத்தில் இறந்தவர்களின் உடல்களை, அரசு செலவில், அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாய், காயமடைந்தோருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார். பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது: b>சென்னை போரூர் மவுலி வாக்கத்தில் நேற்று முன்தினம் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், நேற்று இரவு, 9:45 மணியளவில், ஆண் சடலம் ஒன்றும், 8 வயது சிறுவன் சடலமும் மீட்கப்பட்டது.இதையடுத்து, பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இரவு, 10:10 மணியளவில் மழை பெய்ததால் மீட்பு பணி முடங்கியது. பின், 15 நிமிடத்திற்கு பின் மீட்பு பணி மீண்டும் துவங்கியது.


கதறி அழுத பெண் எஸ்.ஐ., குணவதி:

சென்னை உயர்நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனில், சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் குணவதி. இவர்,நேற்று, மீட்பு பணியில் இருந்தபோது, இடிபாடுகளில் சிக்கி இறந்த ஒருவர் உடலை பார்த்து கதறி அழுதார். அருகிலிருந்தவர்கள், ஏன் அழுகிறீர்கள் என, விசாரித்தபோது, இறந்து கிடப்பது தன் அண்ணன் லோகநாதன்,48, எனக்கூறி, கண் கலங்கினர். அடுக்குமாடி கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட, 20 பேர், போரூரில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஏழு பேருக்கு, கை, கால்களில், எலும்பு உடைந்துள்ளது. அவர்களில், நான்கு பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சென்னையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்கள் குறித்த விவரம் அறிய, ஆந்திர மாநிலம், விஜயநகர மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.இதன் டெலிபோன் எண்: 089222 36947. விஜயநகர மாவட்ட வருவாய் அதிகாரி கட்டுப்பாட்டு அறை மொபைல் எண்: 094910 12012.சென்னையில், மீட்பு பணிகளை கண்காணிக்கவும், ஆந்திராவை சேர்ந்தவர்களை, சொந்த ஊருக்கு அழைத்து செல்லவும், ஆந்திர மாநில அரசு அதிகாரிகள், சென்னை வந்துள்ளனர்.

சென்னை கட்டட விபத்துக்கான காரணத்தை, நன்கு, அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, இதுபோன்ற அதிர்ச்சி தரத்தக்க சம்பவங்களை கட்டாயம் தவிர்க்க, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.என, தி.மு.க., தலைவர்கருணாநிதி அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

விபத்தில் இறந்தவர்கள்
1. மருதுபாண்டி, 25, பேறையூர், மதுரை
2. சாந்தகுமாரி, 25, விஜயநகரம், ஆந்திரா
3. சங்கர், 27, விஜயநகரம், ஆந்திரா
4. ராமு, 36, விஜயநகரம், ஆந்திரா
5. கவுரி, 22, விஜயநகரம், ஆந்திரா
6. அமர்குமார் ராவட், 26, ஒடிசா
7. நிரஞ்சன்தாரி, 35, ஒடிசா
8. அலி, 19, ஒடிசா
9. லோகநாதன், 45, அம்பத்தூர், சென்னை
10. கணேசன், 38, மவுலிவாக்கம்
11. அன்பழகி, 29, இளையனார்குப்பம், விழுப்புரம்

- நமது நிருபர் குழு - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக