திங்கள், 30 ஜூன், 2014

மண்சோதனை நடத்தப்படாத இடத்தில் 11 மாடி குடியிருப்பு கட்டுவதற்கு சிஎம்டிஏ அனுமதி கொடுத்தது ஏன்? ராமதாஸ் கேள்வி

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 11 அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற  செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 11 மாடி கட்டிடம் கட்ட அனுமதி  அளித்த அரசு அதிகாரிகள், தரமில்லாத பொருட்களை கொண்டு கட்டிடம் கட்டிய கட்டுமான நிறுவனம் என இருதரப்பிலும் தவறு இருப்பதாக விசாரணையில்  தெரியவந்துள்ளது. போரூர் முகலிவாக்கம் பகுதியில் இதுவரை 5 மாடிகளுக்கும் அதிக உயரம் கொண்ட கட்டிடங்களை கட்ட அனுமதி அளிக்கப்படாத நிலையில்,  மணல் பாங்கான இடத்தில் மண் பரிசோதனை உள்ளிட்ட எந்த ஆய்வும் நடத்தாமல் 11 மாடி குடியிருப்புக் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எந்த  அடிப்படையில் அனுமதி அளித்தது என்பது தெரியவில்லை.வடிவமைப்பு பொறியாளரின் அறிவுரைகளை கட்டுமான அதிபர் பொருட்படுத்தாமல் அனுபவம் இல்லாத  பொறியாளர்களை கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொண்டார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விபத்துக்கான காரணங்களைக்  கண்டுபிடித்து இனியும் இப்படி ஒரு விபத்து நடக்காத வண்ணம் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். விபத்துக்குக்  காரணமான கட்டுமான நிறுவனத்திடமிருந்து தலா ரூ.10 லட்சம், அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம்  என பலியான ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.15 லட்சம்  இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக