செவ்வாய், 17 ஜூன், 2014

AirAsia ரூ.500க்கு பெங்களூரு-கொச்சி விமான சேவை அறிமுகப்படுத்துகிறது ஏர் ஆசியா

புதுடில்லி:ரூ.500க்கு பெங்களூரு-கொச்சி இடையே விமான சேவையை மற்றொரு வழித்தடத்தை அறிமுகம் செய்ய உள்ளது ஏர் ஆசியா.ஏற்கனவே ஏர்ஆசியா நிறுவனம்,பெங்களூரு-சென்னை, பெங்களூரு-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகம் செய்துள்ள நிலையில் , தற்போது 500 ரூபாய் கட்டணத்தில் பெங்களூரு-கொச்சி நகரங்களுக்கிடையே சேவையை துவங்க உள்ளது.இது குறித்து நாட்டின் நான்காவது வரவு செலவு நிறுவனமான ஏர் ஆசியா இந்தியா லிமிடெட் ஜூலை 20 முதல் பெங்களூரு-கொச்சி இடையே விமான சேவையை துவங்க உள்ளதாக நேற்று அறிவித்தது.இதர விமான சேவை நிறுவனங்களை விட 35 சதவீதம் குறைவான கட்டணத்தில் பயணிகளுக்கு பறக்கும் அனுபவத்தை வழங்கப்போவதாக அறிவித்துள்ள ஏர்ஆசியா கடந்த 12-ம் தேதி பெங்களூரு-கோவா நகரங்களுக்கிடையே தினசரி வழித்தட சேவையை துவங்கியது.
வரும் 19-ம் தேதி முதல் பெங்களூரு-சென்னை இடையே தினசரி இருமுறை என இருவழிப் பாதை வழித்தட சேவையை துவங்கவுள்ளது பெங்களூரு-கொச்சி இடையே தினசரி இருவழி வழித்தட சேவையை வரும் ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அளவிட்ட சலுகையாக இதற்கான கட்டணம் ரூ.500 எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக