செவ்வாய், 17 ஜூன், 2014

T.K.S.Ilangovan :குஷ்பு விலகியது திமுகவுக்கு நஷ்டம்தான்!


பிரச்சனைகள் குறித்து கட்சி தலைமையிடம் பேசி தீர்வு காண நடிகை குஷ்பு தவறிவிட்டார் என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுகவில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு, கலைஞருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டியில், என்ன பிரச்சனைக்காக கட்சியில் இருந்து விலகினார் என்பதை குஷ்பு தெரிவித்திருக்க வேண்டும். பிரச்சனை குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க கூடும். இருப்பினும் கட்சியின் மீது அதிருப்தியோடு இருப்பதாக குஷ்பு தெரிவித்திருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. எந்த ஒரு கட்சியும் உறுப்பினர்களை இழப்பதை விருப்பாது. நிச்சயமாக கட்சிக்கு இதுநஷ்டம் தான். மக்களின் ஆதரவு எங்களுக்கு தேவை. அரசியல் கட்சிகள் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் nakkheeran.in/   இந்த ஆளுங்க வர வர அதிமுக அடிமைகள் போலவே பேச ஆரம்பிச்சிட்டய்ங்க ! ஸ்டாலினின் சர்வாதிகாரத்துக்கு சாமரம் வீசி வீசி ஒரு கழகத்தை  வழிபண்ணிட்டய்ங்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக