திங்கள், 23 ஜூன், 2014

ஜல்லிக்கட்டு அனுமதி கோரிய 17 மனுக்கள் தள்ளுபடி! சென்னை ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடுக்கப்பட்ட 17 மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி கடந்த 2009 முதல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வழக்கு தொடுக்கப்பட்டு, அவை நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், வேலுமணி ஆகியோர் அடக்கிய அமர்வு, ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக மே 7ஆம் தேதி உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மீண்டும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றங்களே அனுமதி மறுப்பது வேதனை அளிப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக