திங்கள், 30 ஜூன், 2014

வந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகம்!

india-child
சென்னையில் கட்டிடம் இடிந்து ஆந்திரவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலி.
இரண்டு வேளை சோறு சாப்பிடுவதற்காக குடும்பத்தோடு கொத்தடிமையாக உழைக்க வந்தவர்களை, குழந்தைகளோடு சேர்த்து பலி வாங்கியிருக்கிறார்கள் கொலைக்காரர்கள்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் லட்சணம் இது.
பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து எத்தனை தொழிலாளர்களின் குடும்பங்களை முற்றிலுமாக சீரழிக்கப் போகிறார்களோ?
பல சிவில் இன்ஜியர்களை இந்த நாட்டுக்கு அர்பணித்திருக்கிற கல்வி வள்ளல் ஜேப்பியார், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன்கல்லூரியில் தான் கட்டிக் கொண்டிருந்த கட்டடம் இடிந்து விழுந்தபோது, பல வடஇந்திய தொழிலாளர்களின் கணக்கை முடித்தார்.
பலர் இறந்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தபோது 10 பேர் இறந்ததாக வழக்கு முடிந்தது. அந்த 10 பேரின் குடும்பத்திற்காகவது என்ன நீதி கிடைத்ததோ?

‘தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்ட ஜேப்பியாரை கைது செய்து கொண்டு போகிறார்கள்’ என்று கவலைப்பட்ட ஊடகங்கள் எதுவும் இன்று வரை இறந்த தொழிலாளர்கள் நிலை குறித்து துப்பறியவே இல்லை.
தமிழகம் முழுக்க சிதறிக்கிடக்கிறார்கள் சோத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இந்தியை தாய் மொழியாகக் கொண்ட தொழிலாளர்கள்.
அவர்களின் உணவுக்கு வழி செய்ய முடியாவிடிலும் உயிருக்கு உலை வைக்காமல் இருந்தாலே போதும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இப்போது வந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகமாக மாறி வருகிறது. mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக