சனி, 24 மே, 2014

பழமையை போற்றுதும் பழமையே தெய்வம் பழமையே புனிதம் ! இந்த பழைய மயக்கம் ?

பழமையான தத்துவங்கள் பழமையான கோட்பாடுகள் எல்லாமே மிகவும்
புனிதமானவை போற்றுதற்கு உரியவை .
ஒரு போதும் அந்த பழமையான தத்துவங்களை நாம் கைவிடவே கூடாது
சனாதன தர்மங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அற்புத கருத்துக்கள் ஆகும் , இதுதான் நமக்கு காலகாலமாக இந்த சமூகமும் சமயமும் நமக்கு கற்று தந்திருக்கும் பாடம்.
இது மிகவும் பிற்போக்கு தனமான ஒரு பாடமாகும் .
சனாதனம் என்றாலே கைகூப்பி தொழவேண்டும் அர்ச்சனை செய்யவேண்டும் என்றால்லாம் பெருசுகள் வரிந்து கட்டி கொண்டு வந்து விடுவார்கள்.
இந்த சனாதனம் என்று இவர்கள் எதை குறிப்பிடுகிறார்கள்?
கணவன் இறந்தால் அவனது எரியும் சவத்தோடு மனைவியும் சேர்ந்து எரிந்து சாம்பலாக வேண்டும் என்பது சனாதன தர்மம், அப்படி எரிந்து சாம்பலானவள் சதிமாதா என்று போற்ற படுவாள் . ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு அந்தஸ்தில் வைக்கப்படுவதும் சந்தன தர்மம் அதாவது பிராமணன் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவனாம்.தாழ்ந்த ஜாதிக்காரன் காலில் இருந்து பிறந்தவனாம் , இது ஒரு சனாதன தர்மம் .இந்த கண்றாவி கோட்பாடுகளையும் நமது தலையில காவுகிறோம் . இரண்டாம் நூறாண்டு வரை இந்த பிராமணர்கள் ஆடு மாடு போன்ற சகல விதமான இறைச்சியும் புசித்தவர்கள் பின்பு சமணர்களை பார்த்து கொல்லாமையை கடைப்பிடிப்பதாக பாவனை பண்ணி தாவர பட்சினியானார்கள் .
அந்த காலத்தில் பிராமணர்கள் வேதங்களில் குறிப்பிட்ட யாகம் எனபடுவது மிருகத்தை நெருப்பில் வாட்டி உண்ணுவதைதான் அவர்கள் யாகம் என்று எழுதி வைத்துள்ளார்கள்.இந்த தர்மத்தை தற்போது பிராமணர்கள் ஏன் கைவிட்டார்கள் என்று யாரும் கேட்பதில்லை .
திருஞான சம்பந்தர் எண்ணாயிரம் சமணர்களை கொன்று இரத்த ஆறு ஓட விட்டார் .இந்த கதையையும் நாம் இருகரம் கூப்பி ஏதோ  ஆன்மீக விடிவுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாக கொண்டாடுவது நமது புனிதமான புராதன தர்மமாம்

எல்லா சமயங்களிலும் இப்படிபட்ட பித்தலாட்ட கருத்துக்கள் கோட்பாடுகள் ஏராளம் உண்டு.
கருத்துக்களை சுயமாக எண்ணி புதிய கருத்துக்கள் உருவானால் பழைய வியாபாரிகளின் வியாபாரம் படுத்துவிடும் .
இந்த ஒரே ஒரு எண்ணத்தில் தான் அத்தனை சமயங்களும் சனாதனவாதிகளும் பழமையை போற்றுதும் பழமையே தெய்வம் பழமையே புனிதம் என்று தங்கள் இஷ்டம் போல கதைகளை அவிழ்த்து விடுகின்றனர்.
இவர்கள் எல்லாம் பழைய பொருள் விற்கும் வியாபாரிகள் .
பழையனவாக இருந்தாலும் புதியனவாக இருந்தாலும் சீர் தூக்கி பார்த்து அறிவு பூர்வமாக ஏற்று கொள்ளக்கூடியதாக இருந்தால் மட்டுமே அவற்றிக்கு பெறுமதி உண்டு .
அறிவுக்கு இந்த பழைய கோட்பாட்டு மயக்கம் ஒரு பெரும் தடையாகும்,
சமயங்களும் சமூகங்களும் மனிதர்களை சிந்திக்க விடாமல் வைத்திருக்க கண்டுபிடித்த மோசடிதான் இந்த் பழைமைய போற்றும் பாரம்பரிய புனித சனாதன போன்ற அழகான லேபில்களின் வழங்கப்படும் பழைய புளித்த  கள்ளு . radhamanohar.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக