சனி, 24 மே, 2014

மொரோக்கோவில் ஜீவா உட்பட யான் படக்குழுவினர் அனைவரும் கைது !

என்றென்றும் புன்னகை படத்திற்குப் பிறகு ஜீவா நடிக்கும் படம் யான்.
இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக துளசி நடிக்கிறார். மற்றும் நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை மொராகோ நாட்டில் நடத்தியிருக்கிறார்கள். அங்கு தீவிரவாதிகள் சிலர் ஜீவாவை கடத்தி செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையறிந்த அந்நாட்டு போலீஸார் உடனே படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்குச் சென்று படப்பிடிப்பை நிறுத்தியயோடு ஜீவா மற்றும் யான் படக்குழுவினர் அனைவரையும் கைது செய்தனர்.

காரணம், அந்த காட்சிகள் பார்ப்பவர்களின் மனத்தில் மொராகோ பற்றி ஒரு தவறான சித்தரிப்பு ஏற்படும் என்பதுதான். அதன் பிறகு எப்படியோ ஒருவழியாக போலீசிடம் இருந்து விடுபட்டு இந்தியா திரும்பியுள்ளனர் படக்குழுவினர். மேலும் மொராகோவில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போன அந்த காட்சியை சென்னையிலே செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இச்சம்பவம் கோலிவுட்டில் சிறிது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக