தேர்தல் பணியின் போது, ஆளும் கட்சிக்கு ஒத்துழைக்காத, போலீஸ் அதிகாரிகளை
இடமாற்றம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.லோக்சபா
தேர்தலில், அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு, சரியாக பணி செய்யாத அமைச்சர்கள்,
கட்சி நிர்வாகிகளை, முதல்வர் ஜெ., பதவி நீக்கம் செய்து வருகிறார்.
இந்நிலையில், தேர்தல் கமிஷனின் உத்தரவுபடி, லோக்சபா தேர்தலின் போது,
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சில போலீசார், ஆளும் கட்சி அமைச்சர்கள்,
நிர்வாகிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என, கட்சியினர், தலைமைக்கு புகார்
அனுப்பி உள்ளனர். இவர்கள் பற்றிய பட்டியலையும், தேர்தலில், ஆளும்கட்சிக்கு
ஒத்துழைத்த போலீஸ் அதிகாரிகளின் பட்டியலையும், முதல்வரிடம், கட்சியினர்
சமர்பித்து உள்ளதாக, கூறப்படுகிறது.
இந்த பட்டியலின் அடிப்படையில், எஸ்.பி., முதல், பல போலீசார், இடமாற்றம் செய்யப்படலாம் என, கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு, சலுகைகள் வழங்கும் திட்டமும் உள்ளதாக, போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. போலீசும் நீதி்பதி்களும் இந்த ஆளுங்கட்சியின் அடிமைகளாக இருக்கவேண்டுமா இல்லையெனில் பழிவாங்கும் நடவடிக்கையா போலீசே பயந்தால் மற்றவர்கள் எப்படீ
அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்தலையொட்டி, சொந்த மாவட்டத்தில் பணியாற்றியவர்கள், வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர். இவர்களை, மீண்டும், அதே இடத்திற்கு, மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், தேர்தலின் போது, ஆளும் கட்சிக்கு ஒத்துழைத்த, ஒத்துழைக்காத போலீஸ் அதிகாரிகளை, இடம் மாற்றுவது என, அரசு திட்டமிட்டு, அதற்கான பட்டியல் தயாரிக்கிறது. ஓரிரு நாளில், இடமாற்றம் அறிவிப்பு வெளியாகலாம். இத்திட்டம், அதிகாரிகளின் மத்தியில், ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக