ஞாயிறு, 25 மே, 2014

விஜயகாந்த் கட்சியை பா.ஜ.,வில் இணைப்பாரா (விற்பார்?) ? நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பம் ?

தே.மு.தி.க.,வை கைகழுவி விட்டு, விஜயகாந்த், பா.ஜ., தலைமையை ஏற்பாரா
என்ற எதிர்பார்ப்பு, அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.கடந்த, 2005ல் துவங்கப்பட்ட, தே.மு.தி.க., 2006ல் சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலையும், 2009ல் லோக்சபா தேர்லையும், பல சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலையும் தனியாக சந்தித்தது.இதன் மூலம், ஓட்டு வங்கி பலத்தை, அரசியல் களத்தில் உணர்த்தி, அ.தி.மு.க., - -தி.மு.க.,விற்கு அடுத்து, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையைப் பெற்றது. 2011 சட்டசபை தேர்தலில், முதல் முறையாக அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 
நல்ல விலை கொடுத்தால் கட்டாயம் பிஜேபிக்கு விற்று விடுவார். பேரம் பேசுங்கள். கன்னத்தை தடவியதிலேயே பாதி விழுந்துவிட்டாரே? எந்தனையோ கதாநாயகிகள் தடவியதை விட இது ரொம்ப இனிக்கிறதாமே?  சிரஞ்சீவியே தனது கட்சியை காங்கிரசுக்கு விற்று கல்லா ரோப்பல்லையா ?
இதில், அ.தி.மு.க., ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சி பணிகளை சரியாக நிறைவேற்றாததால், அதற்கு முன் வரை எழுச்சியாக இருந்த, தே.மு.தி.க.,வின் ஆதரவு, மக்கள் மத்தியில் குறைந்தது.இதுமட்டுமின்றி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேர், அ.தி.மு.க., ஆதரவு நிலைக்கு மாறினர். அக்கட்சியின் அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், கட்சிப் பதவி மற்றும் ஆலந்தூர் எம்.எல்.ஏ., பதவியை உதறிவிட்டு, அ.தி.மு.க.,வுக்கு தாவினார்.சட்டசபையில், கூட்டணி தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இடையே, நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா, 'தே.மு.தி.க., பெற வேண்டிய ஏற்றங்களை, அ.தி.மு.க., மூலம் பெற்று விட்டது. இனிமேல், அந்த கட்சிக்கு இறங்குமுகமே' என்றார். மிகப்பெரிய சறுக்கல்< முதல்வர் கூறிய வாக்கு பலித்தது போல, லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க.,விற்கு பெரும் தோல்வி கிடைத்திருக்கிறது.பா.ஜ., கூட்டணியில், 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கட்சி துவங்கிய, 10வது ஆண்டில், மிகப் பெரிய சறுக்கல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியிலிருந்து, தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என, அனைத்து தரப்பினரும், இன்னும் மீளவில்லை.ஏற்கனவே, கட்சி வளர்ச்சிக்காக செய்த செலவை ஈடுகட்ட முடியாமல், அடுத்து என்ன செய்வது என்ற மனநிலையில், மாவட்டச் செயலர்கள் உள்ளனர். அ.தி.மு.க., - -தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரும் பட்சத்தில், அந்த பக்கம் சாயும் எண்ணத்துடன், எம்.எல்.ஏ.,க்கள் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.இது ஒருபுறம் இருக்க, அவதூறாக பேசியதாக, விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, கட்சி நிர்வாகிகள் மீது, அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதா தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளில் ஆஜராக முடியாமல், அவர்கள் திணறி வருகின்றனர்.< வரும் காலங்களில், அரசுக்கு எதிராக வாய் திறந்தால், மேலும் பல அவதூறு வழக்குகளை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். விஜயகாந்த், பிரேமலதா இதை எதிர் கொண்டாலும், வழக்கு செலவு, பயணச் செலவுக்கு பணம் இல்லாமல் தவிக்கக்கூடிய நிலை, மற்ற நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், சமீபத்திய தோல்வியால், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தலைமையில் கூட்டணி அமைக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது.எனவே, இவற்றையெல்லாம் கருதி, தே.மு.தி.க.,வை கைகழுவி விட்டு, பா.ஜ.,வில் விஜயகாந்த் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:
விஜயகாந்த் எடுத்த தவறான முடிவுகளால், 2011 உள்ளாட்சி தேர்தல் முதல், கட்சி படு தோல்வியை சந்தித்து வருகிறது. கிளை நிர்வாகிகள் முதல், மாநில நிர்வாகிகள் வரை அனைவரும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் கடனாளி ஆகியுள்ளனர்.மத்திய அரசில் தே.மு.தி.க., அங்கம் வகித்தால் மட்டுமே, கட்சியினர் செழிப்பாக முடியும். தேர்தல் தோல்வியால், அதற்கும் வழியில்லை. விஜயகாந்த் தன்னை நம்பி இருக்கும், 30 லட்சம் தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் எனில், அதற்கு ஒரே வழி, தே.மு.தி.க.,வை பா.ஜ.,வில் இணைப்பது தான். இதுவே புத்திசாலித் தனமான முடிவாக இருக்க முடியும்.லோக்சபா தேர்தலில் பெற்ற அசுர வெற்றியால், அ.தி.மு.க.,வின் நெருக்கடிகள் கூடும். அதை சமாளிக்க முடியாமல், அடுத்த இரண்டு மாதங்களில், தே.மு.தி.க.,வினர் ஓட்டம் பிடிக்க வாய்ப்புள்ளது.அதேநேரத்தில், விஜயகாந்த், பா.ஜ.,வில் இணைந்தால், அக்கட்சியின் மாநிலத் தலைவராக உயர முடியும். மோடியின் நன்மதிப்பை பெற்று இருக்கும் அவரை, 2016 சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக கட்சி முன்நிறுத்தவும் வாய்ப்புள்ளது. கட்சியை கலைப்பதா?
தே.மு.தி.க., - -பா.ஜ., ஓட்டு வங்கியுடன், கூட்டணி பலம் அதிகரித்தால், விஜயகாந்த் எண்ணம் நிறைவேறும். கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியை கலைப்பதா என்று சிலர், வீண் ஜம்பம் பேசுவர்.இந்த விஷயத்தில் வறட்டு கவுரவம் பார்த்து, முடிவெடுக்க தாமதித்தால், நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்திற்கு எதிரான முடிவை எடுத்து விடுவர். நல்ல முடிவை விஜயகாந்த் எடுப்பார் என்ற நம்பிக்கையில் தான், நிர்வாகிகள் பலரும் காத்திருக்கின்றனர்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

-- நமது சிறப்பு நிருபர் -- dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக