தாய்லாந்தில் முன்னாள் அதிபர் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது
செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் திடீர் ராணுவ புரட்சி
ஏற்பட்டது. இடைக்கால அரசு செயலிழந்த நிலையில், சட்டம் ஒழுங்கை
நிலைநாட்டுவதற்காக ராணுவ சட்டத்தை அமல்படுத்தியது அந்நாட்டு ராணுவம். ராணுவ
தளபதி ஜெனரல் பிரயுத் சான் ஓசா தன்னை புதிய பிரதமராக அறிவித்துக்
கொண்டார். இந்நிலையில் முன்னாள் அதிபர் இங்லக் ஷினவத்ரா மற்றும்
அவரது ஆட்சியில் அங்கம் வகித்த முக்கிய தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக
ராணுவம் நேற்று அறிவித்தது. அவர்கள் பாதுகாப்பாக உள்ள னர் என்பதை தெரிவித்த
ராணுவம், எந்த இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கூற
மறுத்துவிட்டது. மேலும் ராணுவ நிர்வாக குழுவானது, அரசியல் பிரமுகர்கள்
உட்பட 35 பேருக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.இதனால் தாய்லாந்தில்
தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக