ஞாயிறு, 25 மே, 2014

தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் ஏன்? ஸ்டாலினை காப்பற்ற ஜெயா ஆதரவாளர்கள் கடும் முயற்சி ?

தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்கு, அடுத்த மாதம், 2ம் தேதி சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூடுகிறது. அக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட, 24 பேர் பங்கேற்க உள்ளனர். அனைத்து மாவட்ட நிர்வாகத்தையும், கூண்டோடு கலைத்து விட்டு, உட்கட்சி தேர்தல் மூலம் புதிய நிர்வாகத்தை கொண்டு வரும் வகையில், அதிரடி முடிவு எடுக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற ஓட்டு சதவீதத்தை விட, 20 சதவீதம் ஓட்டு, தி.மு.க.,வுக்கு குறைந்துள்ளது. பெரும் சரிவுக்கான காரணங்களை ஆராய்ந்து, கட்சியின் கட்டமைப்பு பணிகளை சீர்படுத்தி, புது ரத்தத்தை கட்சிக்கு பாய்ச்ச வேண்டும் என, தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்கும், கட்சியின் ஓட்டு வங்கியை பலப்படுத்துவதற்கும், அடுத்த மாதம், 2ம் தேதி, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம், தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது. இந்த குழுவில் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் மற்றும் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குண பாண்டியன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பெ.கல்யாணசுந்தரம், கோ.சி.மணி, டி.ஆர்.பாலு, ஆ. ராஜா, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி, மாதவன், சுப.தங்கவேலன், கோவை ராமநாதன், தூத்துக்குடி பெரியசாமி, ஜெயசீலன், கோவை கண்ணப்பன், ஈரோடு முத்துசாமி ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். சுத்தி வளைச்சு திமுக தோல்விக்கு காரணங்களை அடுக்கும் சோம்பு பத்திரிகைகள் ஒருபோதும  ஸ்டாலினை பற்றி முச்சு விடாது,  ஸ்டாலின் கையில் இருந்து திமுக மீளாதவரை இனி வெற்றியே கிடையாது
இதில் ஒரு சிலருக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களால், கூட்டத்தில் பங்கேற்க தான் முடியுமே தவிர, வேறு வழிகளில் கட்சிக்காக உதவிட வாய்ப்பில்லை. அதேசமயம், சில மூத்த தலைவர்கள், கட்சி தொண்டர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சும் அளவிற்கு, முக்கிய ஆலோசனைகளை வழங்க திட்டமிட்டு உள்ளனர். கட்சியின் தற்போதைய நிலவரம் பற்றியும், எதிர்கால திட்டங்களை பற்றியும் குழுவின் உறுப்பினர்கள், சிலர் பரபரப்பாக பேசுவதற்கு வாய்ப்புள்ளது.

உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில், யார், யார் எப்படி பேசுவர் என்பது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பின், கட்சியில் வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் பேசக் கூடிய நபர்கள், ஒரு சிலர் தான் உள்ளனர். அப்படி பேசக்கூடிய, மாவட்டச் செயலர் சிலர், இந்த குழுவில் உறுப்பினர்களாக இல்லை என்பதால், கூட்டத்தில் கோடை இடி போலவும், இடி முழக்கத்துடனும் தோல்விக்கான காரணங்களை புள்ளி விவரமாக பேசுவதற்கு வாய்ப்பு இல்லை.

கூண்டோடு கலைக்க:

துரைமுருகன், செ.மாதவன், டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், கோவை ராமநாதன், ஜெயசீலன், தூத்துக்குடி பெரியசாமி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும், காரசாரமாக பேசுவர் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, அனைத்து மாவட்டத்தையும் கூண்டோடு கலைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட முடியாமல், மூத்தவர்கள் மாவட்ட செயலர்களாக உள்ளனர். மாவட்ட செயலர்களில் சிலர், தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளை நடத்துகின்றனர். கல்வி கட்டணம் கணிசமாக வசூலித்து வருவதால், அம்மாவட்ட செயலர்கள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சில மாவட்ட செயலர்கள் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத தொழில்களை நடத்தி வருவதாலும், பொது மக்களிடம் நல்ல அபிப்ராயங்களை பெறவில்லை. ஒரு சில மாவட்ட செயலர்கள், தங்கள் மாவட்டங்களில், தங்கியிருந்து கட்சி பணிகளில் ஈடுபடுவதில்லை. பெரும்பாலான நாட்களில், சென்னையில் தங்கிக் கொண்டு, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில், சொந்த மாவட்டத்திற்கு வருவதால், அவர்களுக்கும், கட்சியினருக்கும் இடைவெளி அதிகரித்து விட்டது.

இளைஞர் அணி:

புதிய வாக்காளர்களுக்கும், படித்த இளைஞர்களுக்கும் கட்சி மீது நம்பிக்கை பெறும் வகையில், கட்சியினரின் செயல்பாடுகள் அமையவில்லை. எனவே, இளைஞர்களின் ஓட்டுகளை கவரும் வகையில், இளைஞர் அணி நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆளுங்கட்சியின் பணபலம், தேர்தல் கமிஷனின், 144 தடை உத்தரவு, போலீசாரின் மறைமுக ஆதரவு, பலமான கூட்டணி அமைக்காமல் தவிர்த்தது, அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தது, தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யாதது, உள்குத்து போன்ற அடுக்கடுக்கான காரணங்களை தெரிவிக்கவும், தயாராக உள்ளனர். அதேசமயம், தேர்தல் தோல்விக்கு, குடும்பத்துக்குள்ளேயே இருந்து கொண்டு, சிலர் நடத்திய கூத்துக்களும் தான் காரணம் என, ஸ்டாலின் பேசுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக