செவ்வாய், 20 மே, 2014

விசுவாசத்திற்கு கிடைத்த வெகுமதி: ஒரு அடிமையின் ஒப்புதல் வாக்குமூலம் !அமைச்சர் கோகுல இந்திரா!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக
வெற்றி பெற்றது. இத்தேர்தலில் அதிமுக கூட்டணியின்றி தனித்து நின்றதால் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்பட்டது. கருத்து கணிப்புகளும் அதிமுகவிற்கு கணிசமான இடங்கள் கிடைத்தாலும் திமுகவும் ஒரு சில இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி வந்தன. அந்த வகையில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் மத்திய சென்னை தொகுதியில் திமுக வெற்றி பெறும் என்று தெரிவித்தபோதிலும், அ.தி.மு.க.வின் அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள கோகுல இந்திரா, தங்கள் கட்சி தலைமையின் நம்பிக்கையை பொய்யாக்காமல் கட்சிக்கு விசுவாசமாக அடிமை போல  உழைத்தார். 


மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தனது அண்ணா நகர் தொகுதியில் மட்டும் அதிமுகவுக்கு திமுகவை விட 22687 வாக்குகள் கூடுதலாக கிடைக்கும் வகையில் தீவிரமாக பணியாற்றினார். அதனாலேயே மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க 45841 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது.

கோகுல இந்திராவின் இந்த தீவிர விசுவாசத்திற்கு முதல்வர் ஜெயலலிதா தற்போது வெகுமதி வழங்கியுள்ளார். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதிலிருந்து கட்சிக்கும், தனக்கும் விசுவாசமாக இருக்கும் எவரையும் ஜெயலலிதா கைவிடமாட்டார் என்பது மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக