செவ்வாய், 20 மே, 2014

Social Media's Victory சமுக வலை தளங்களால் வாக்குகளை அள்ளிய பாஜகவும் அதிமுகவும் !

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 18115825
வாக்குகள் கிடைத்துள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, இரு மடங்கு வாக்குகளை அதிகம் பெற்று அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. இத்தேர்தலில் புதிதாக வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்களின் வாக்குகளை அதிமுக அள்ளிக் குவித்திருக்கிறது. இதற்கு காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி வியூகம் தான். அவரது அதிரடி வியூகத்தின் காரணமாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பிரசார யுக்தி, இளைஞர்களின் வாக்குகளை அதிக அளவில் ஈர்த்தது.
எஸ்.எம்.எஸ் பிரச்சாரம், வாட்ஸ் ஆப் மூலம் முதல்வரின் சாதனை வீடியோக்கள், வாக்காளர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு முதல்வர் ஜெயலலிதா பேசும் ஒலி நாடா, வீடியோவில் ஜெயலலிதா வாய்ஸ் ஆகியவை புதிய வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் காரணமாகவே அதிமுக அதிக தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தலில் வெற்றி பெற்றதுடன் நின்றுவிடாமல் தற்போது வாக்காளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு முதல்வர் நன்றி தெரிவிக்கும் ஒலிநாடாவும் அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவால் அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக