செவ்வாய், 20 மே, 2014

பாரதம் என்னுடைய தாய்.. பாஜக என் தாய்... கண்ணீர் விட்ட மோடி !

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடி ஏற்புரை ஆற்றினார்.
அப்போது,   ‘’தாயின் இடத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது.  பாரதம் என்னுடைய தாய்.. பாஜக என் தாய்..  நாட்டு மக்களின் நம்பிக்கை, கனவு, விருப்பம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகத்தான் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம்; பதவிக்காக இல்லை.
  ஜனநாயக நாடான இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கையோடு இந்த வெற்றியை அளித்துள் ளார்கள்.  நாட்டில் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கும் அரசாக இந்த அரசு இருக்கும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவதை நான் நம்ப வில்லை.   அவர்கள் அரசு தங்களால் முடிந்ததை செய்திருக்கிறார்கள்.   மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். மக்களின் பிரச்னைகளுக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர பதவிக்கு அல்ல. இதுவரை இந்தியா கண்ட பிரதமர்களிலேயே கண்ணீர் விட்டவர் இவர்தான் , மக்கள் எதிர்காலத்தில் கண்ணீர் விடாமல் இருக்க பிரார்த்திப்போமாக ! அத்வானியின் சோகம் ஊமை கண்ட கனவானதே ?

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன். என்னை பிரதமராக தேர்வு செய்த நாடாளுமன்றக் குழுவுக்கு நன்றி.  ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனுக்காக தேஜகூ பாடுபடும். பாஜக அடைந்துள்ள இந்த வெற்றி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் வழிகாட்டுதல் படி அடைந்தது. மூத்த தலைவர் அத்வானி, அவரது ஆசிகளை எனக்கு வழங்கியுள்ளார்’’ என்றார்.
மேலும், பாஜக எனது தாயைப் போன்றது என்று நா தழுதழுத்த குரலில் பேசினார். மேற்கொண்டு அவரால் பேச முடியவில்லை. பிறகு தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு பிறகு தனது ஏற்புரையை தொடர்ந்தார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக