ஞாயிறு, 4 மே, 2014

குற்றத்தை நிரூபித்தால் ஆயுள் சிறையை அனுபவிக்கத் தயார்: ஆ.ராசா

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தன் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபித்துக் காட்டினால், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, "கடந்த 2011 ஆம் ஆண்டு ஆங்கில நாளிதழ் ஒன்றில், நான் ரூ.3,000 கோடியை வெளிநாட்டு வங்கியில் பதுக்கிவைத்திருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. அன்றே நான் நீதிபதியிடம் சென்று அந்தச் செய்தியை காட்டினேன்.
வெளிநாட்டு வங்கியில் எங்காவது எனக்கு ஒரு ரூபாயோ அல்லது ஒரு டாலரோ எனது பெயரில் இருப்பதாக சி.பி.ஐ கண்டுபிடித்தால், என் மீதான வழக்குகளை நடத்துவதை நிறுத்திவிடுகிறேன்.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு நான் சவால் விடுக்கிறேன். அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டினால், வாழ்நாள் முழுவதும்கூட சிறை செல்லத் தயாராக உள்ளேன்" என்றார் ஆ.ராசா.
திமுக சார்பில் நீலகிரி மக்களவைத் தொகுதியில், ஆ.ராசா போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக