சனி, 24 மே, 2014

கவர்ச்சியா நடிக்கும் போது தெரியலியா'..சுருதியின் புகாருக்கு தயாரிப்பாளர் பதிலடி !

தன்னை ஆபாசமாகப் படம் பிடித்துவிட்டார்கள் என தெலுங்கு சினிமாக்காரர்கள் மீது நடிகை ஸ்ருதி ஹாஸன் புகார் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு தெலுங்கில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் ஆபாசமாக ஆடியதைத்தானே படமாக்கினோம்... அதற்கு புகார் செய்வதா என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி, சமீபத்தில் எவடு படத்தில் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார்.
இந்தப் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாயின. கிட்டத்தட்ட அரை நிர்வாணம் எனும் அளவுக்கு ஆபாசம் தெறித்தது அந்தப் படங்களில். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின. படத்தில் நடிக்கும்போது இதுபற்றி கவலையே படாமல், முன்னழகு வெளியில் பளிச்சென்று தெரியும்படி ஆடிய ஸ்ருதிக்கு, அதுவே புகைப்படங்களாக வெளியானபோது அதிர்ச்சியாகிவிட்டது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்  பாலகுமாரா அல்லது கமல ஹாசா ?
உடனடியாக படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுவை தொடர்பு கொண்டு பேசினார். அவரோ இந்த கவர்ச்சிப் படங்கள் எப்படி வெளியாகின என்று தனக்கு தெரியாது என கை விரித்து விட்டார். இதையடுத்து போலீசில் புகார் கொடுத்தார் ஸ்ருதி. தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டவர்களை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். தெலுங்கு சினிமா படப்பிடிப்பு தளங்களில் போட்டோ எடுக்கும் பத்து போட்டோகிராபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தெலுங்கு பட உலகினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ருதிஹாசன் ஏற்கனவே நிறைய படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். பாலியல் தொழிலாளியாக இந்திப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் படு ஆபாசமான காட்சிகளில் உடலுறவு கொள்வது போன்ற போஸ்களைக் கொடுத்துள்ளார்.
மேலும் இந்த எவடுவில் அவர் விருப்பத்தோடுதான் அந்தப் பாடல்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தெரியாமல் இந்தப் படங்கள் எடுக்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடனமாடியபோது எடுத்த ஸ்டில்கள்தான் இவை. எனவே இந்தப் புகாரில் உண்மையும் இல்லை, அர்த்தமும் இல்லை. தேவையில்லாத நெருக்கடியை ஸ்ருதிஹாஸன் உருவாக்கிவிட்டார் என தெலுங்கு படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
/tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக