வியாழன், 15 மே, 2014

61 ஆண்டு பழைய 200-க்கும் மேற்பட்ட கார் கலெக்ஷன்


61 ஆண்டுகளாக யாருடைய கண்களிலும் தட்டுப்படாமல் இருந்த 200-
க்கும் மேற்பட்ட பழைய கால கார் கலெக்ஷன் ஒன்று,  அமெரிக்கா, ஆக்லஹோமாவில் அடுத்த மாதம் ஏலத்துக்கு வருகிறது.
இந்த கார்கள், எனிட் நகரத்தில் பிசினெஸ்மேனாக 1945 – 1953 காலப்பகுதியில் இருந்த ஆலிவர் ஜோர்டான் என்பவருக்கு சொந்தமானவை. இவருக்கு ஏற்பட்ட நில தகராறு ஒன்று நீண்டகாலமாக இழுபறியில் இருந்த நிலையில், அங்கு நிறுத்தப்பட்ட இந்த கார்களை,  பூட்டியபடியே விட்டு வைத்திருந்தார்.
காலப்போக்கில், இந்த 200-க்கும் மேற்பட்ட கார்கள் அங்கு இருப்பது மறக்கப்பட்டு விட்டது.

இந்த கார் கலெக்ஷனில் உள்ளவை பெரும்பாலும் 1930களிலும், 40களிலும் தயாரிக்கப்பட்ட கார்கள். இவற்றில் உள்ள மிக பழமையான கார், 1917-ம் ஆண்டு மாடல் மாக்ஸ்வெல்.
ஆலிவர் ஜோர்டான், கடந்த 2003-ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது விதவை மனைவி சமீபத்தில் மரணமடைந்தார். அவரது பேரன்தான் இந்த கார்களை ஏலத்துக்கு கொண்டுவருகிறார்.
61 ஆண்டுகளாக கவனிக்கப்படாத நிலையில் இருந்ததால், கார்களின் வெளிப்பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன (மேலே போட்டோ பார்க்கவும்). இருப்பினும் இந்த கார்களின் பழமை காரணமாக, இவை நல்ல விலைக்கு ஏலம் போகும் என கூறப்படுகிறது.
அதுவும், இந்த கார் கலெக்ஷனில் அபூர்வமான சில மாடல்களும் உள்ளதால், கார் சேகரிப்பாளர்கள் பலர்,  ஏலத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஏலம், அடுத்த மாதம் (ஜூன்) 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக