வியாழன், 15 மே, 2014

பார்ப்பனர்களிடமிருக்கும் பார்ப்பனியத்தைவிட அடிமைகளின் பார்ப்பனியம் பேராபத்து நிறைந்தது

மோடி யிடம் இல்லாத ஒரே பொருத்தம் அவர் பார்ப்பனராக இல்லாததுதான். ஆனால், பார்ப்பனராகும் தகுதி மோடிக்கு இருக்கிறது. அவரை பார்ப்பனராக்கும் பார்ப்பன சுப்பிரமணிய சுவாமியே அதற்கு உதாரணம்.
இதற்கு முன் சு சுவாமி, தன்னை தேவர் என்று சொல்லிக் கொண்டார். ‘நீ பிராமணனே கிடையாதுடா… தேவர்..’ என்று சு சுவாமியிடம் அவர் அம்மா குறிப்பிட்டதாக பெருமையோடு தேவர் ஜாதி மேடையில் அறிவித்தார்.
சு. சுவாமிக்கு ஒரு வேண்டுகோள்; பலபேர் பார்ப்பனராவதற்கு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய அடிமைப் புத்தி பார்ப்பனியத்திற்கு சேவகம் செய்து நக்கி பிழைப்பதிலேயே அதிக நாட்டம் கொள்கிறது.ஆக, மோடி மட்டுமல்ல பல ‘கேடி’ பேர் ‘அது முடியலையே’ என்று படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
‘பஞ்ச்’ டயலாக் பேசுகிற பலபேர் பார்ப்பனியத்தைப் பார்த்தால் பம்முவதும் பல் இளிப்பதும் அதனாலேயேதான்.
ஆக, அவர்களும் மோடி யைப் போலவே முழுத் தகுதியோடு இருக்கிறார்கள், பார்ப்பனராவதற்கு.
தயவு செய்து அந்த மாவீர்களையும் பார்ப்பனராக்கி ஜெயேந்திரனின் பல்லைப்போல் மாத்திவிட்டுரு. எங்களுக்கு வேலை மிச்சம்.>இத்தனை நூற்றாண்டுகளாக பார்ப்பனியத்தை வாழவைப்பது. பார்ப்பனரல்லாதவர்களே. பார்ப்பனர்களின் ஆயுதங்களும் அவர்களே.
பார்ப்பனர்களிடமிருக்கும் பார்ப்பனியத்தைவிட, பார்ப்பனரல்லாத அடிமைகளின் பார்ப்பனியம் பேராபத்து நிறைந்தது. அதற்கு ‘மோடி’ யே ஒரு இந்திய உதாரணம் பார்ப்பனியத்திற்காக சமணர்களை பவுத்தர்களை கொன்று குவித்தது நேரடியாக பார்ப்பனர்கள் அல்ல; அவர்களின் அடியாட்களான பார்ப்பனரல்லாத சேர, சோழ, பாண்டிய பச்சைத் தமிழ் மன்னர்களே.
அதனால்தான் மன்னர்களை பார்ப்பனர்களுக்கு அதிகம் பிடிக்கிறது.
இந்து மதத்தின் பெயரில் இஸ்லாமியர்களை கொன்று குவித்தது பார்ப்பனர்கள் அல்ல; அவர்களின் அடியாளான மோடி யே.
அதனால்தான் பார்ப்பனர்களுக்கு மோடி யை அதிகம் பிடிக்கிறது. mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக