திங்கள், 3 மார்ச், 2014

என்.டி.திவாரி : ரோகித் சேகர் என் மகன்தான் ! ஒப்பு கொண்டார் என்.டி.திவாரி youtube

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி. தற்போது இவருக்கு 89 வயதாகிறது. ஆந்திர மாநில கவர்னராகவும், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில முதல்வராகவும் பதவி வகித்தவர். கடந்த 2008ம் ஆண்டு உ.பி.யில் காங்கிரஸ் பெண் நிர்வாகி உஜ்வாலா சர்மா என்பவரின் மகன் ரோகித் சேகர் (34), என்.டி.திவாரிதான் என் தந்தை என்று பேட்டி அளித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ரோகித் என் மகன் அல்ல என்று திவாரி திட்டவட்டமாக மறுத்தார். இதையடுத்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் ரோகித். எனது தந்தை யார் என்று பலர் கேட்கின்றனர். இதனால் சமூகத்தில் என்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. சொத்துக்காக நான் இதை கூறவில்லை. உண்மையில் திவாரிதான் என் தந்தை. இதை அவர் ஏற்றுக் கொண்டால் போதும் என்று கூறியிருந்தார்.  இவா எல்லாம் முதல் மந்திரி மத்திய மந்திரி கவர்னர் தூத்தேரி !


இதையடுத்து திவாரிக்கு மரபணு சோதனை (டிஎன்ஏ) நடத்த கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், சோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க திவாரி மறுத்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கடைசியில் திவாரிக்கு டிஎன்ஏ பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் ரோகித்தின் மரபணுவும், திவாரியின் மரபணுவும் ஒத்து போயின. இந்நிலையில், ரோகித் என் மகன்தான் என்று 6 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்படையாக நேற்று ஒப்புக் கொண்டார் திவாரி. மேலும், நேற்றிரவு ரோகித்தை தனது வீட்டுக்கு வரவழைத்து பேசினார். இதுகுறித்து பேட்டி அளித்த திவாரி, கோர்ட்டில் போராடி ஓய்ந்து விட்டேன். ரோகித் சேகர் என் மகன்தான் என்பதை ஒப்புக் கொண்டேன். டிஎன்ஏ பரிசோதனையும் அதை உறுதி செய்து விட்டது. இனி குடும்பமாக இருப்பதில் மகிழ்ச்சி என்றார்.

ரோகித் தொடர்ந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து ரோகித் கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக நானும் என் அம்மாவும் பல வேதனைகளை அனுபவித்து விட்டோம். அதுபற்றி இனி பேச கூடாது. எங்கள் மனக்காயங்கள் இனி மெல்ல ஆறும். என்னுடைய இந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் என்றார். இனி வரும் காலங்களில் உங்கள் மகனுடன் வசிப்பீர்களா? என்று கேட்டதற்கு, அதனால் என்ன.. என்று பதில் அளித்தார் திவாரி. சொத்துக்காக வழக்கு தொடரவில்லை. சமூகத்தில் எனது தந்தை திவாரிதான் என்பதை சொல்ல வேண்டும் என்று ரோகித் கூறியிருந்தாலும், திவாரியின் சொத்தில் பங்கு கேட்டு ரோகித் தனி வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.dinakaran.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக