செவ்வாய், 4 மார்ச், 2014

ஜெயலலிதா : துரோகம் இழைத்த காங்., - தி.மு.க.,விற்கு பாடம் புகட்டுங்கள் !

காஞ்சிபுரம்: ''மத்தியில் உள்ள காங்., ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை மலர வைக்க, அ.தி.மு.க.,வை ஆதரியுங்கள்,'' என, காஞ்சிபுரத்தில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், இக்கூட்டத்தில், தமிழகத்திற்கு, மத்தியில் உள்ள காங்., அரசு செய்த துரோகங்களையும், முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டார். லோக்சபா தேர்தல் பிரசாரத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை, காஞ்சிபுரத்தில் துவக்கினார். பிரசார பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது: கடந்த, 2011 தேர்தலில், தமிழகத்தில், குடும்ப ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தேன்; அதை நிறைவேற்றினீர்கள்.
சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மின்வெட்டு மூன்று மாதங்களில் சரி செய்யாதது முதல் துரோகம் பழைய ஓய்வூதி்ய தி்ட்டமே தொடரும் என வாக்குறுதி் அளித்துவிட்டு புதி்ய ஓய்வூதி்யத் தி்ட்டத்தை கொண்டு வந்தது இரண்டாவது துரோகம் மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணி வழங்க நீதி்மன்றம் ஆணையிட்டும் அதை மதி்க்காதது அடுத்த துரோகம் டாசுமாக்கை தி்றந்து வைத்து அனைவரையும் குடிகாரர்களாக மாற்றியது துரோகம் மீசை வைத்துள்ள வயதி்ல் மூத்த ஆண் மகனை தனது காலடியில் விழ வைப்பது ஆண்குலத்துக்கு இழைக்கும் அடுத்த துரோகம் வளர்ப்பு மகனுக்கு சிறப்பு தி்ருமணம் செய்து வைத்தபின் ஒதுக்கி தள்ளியது துரோகம் நடராசனுக்கு சொந்தமான சசியை அபகரித்து தன்னுடனேயே வைத்துக்கொண்டதும் துரோகம் வருமானவரி செலுத்தாமை வாய்தா வாங்கி வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிப்பது துரோகம் ஃ மீதி் துரோகங்களை யாராவது தொடருங்கப்பாஃஃஃ


அதே போல், தற்போது, மத்தியில் உள்ள காங்., ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை மலர வைக்க வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளில், நாட்டை சூறையாடிய, காங்., தலைமையிலான மத்திய அரசை, தூக்கி எறிய வேண்டும். எதிர்காலத்திலும், மத்தியில் காங்., ஆட்சி அமைய விடக் கூடாது.
இட ஒதுக்கீடு: நடைபெற உள்ள தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை, முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல; மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்தியாவில் நடைபெறும், குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் மூலம், மக்களாட்சி மலர வேண்டும். அந்த ஆட்சி, தமிழகத்தின் ஆட்சியாக, அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் ஆட்சியாக, அமைய வேண்டும். அப்போது தான், தமிழர் களின் உரிமை நிலைநாட்டப்படும்; கோரிக்கை கள் நிறைவேற்றப்படும்; தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்;

தமிழக மக்களின், வாழ்வு வளம் பெறும். இலங்கை அரசின், தமிழின விரோத நடவடிக்கை காரணமாக, தமிழக மீனவர்கள் சுதந்திரமாக, மீன்பிடித் தொழிலை செய்ய முடியவில்லை. இலங்கை அரசின், அராஜக நடவடிக்கைக்கு, முற்றுப்புள்ளி வைக்க, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, 3.5 சதவீதம் இட ஒதுக்கீடை, அதிகப்படுத்தும்படி, இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அவர்களின் கோரிக்கை, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆணையத்தின் பரிந்துரை கிடைத்ததும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
துரோகம்: இலங்கை அரசுக்கு ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் அளித்தது, அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது, முதல் துரோகம். இலங்கை அரசுக்கு சாதகமாக, நடந்து கொண்டது, இரண்டாவது துரோகம். இலங்கை அரசால், தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்காதது, மூன்றாவது துரோகம். கச்சத்தீவை மீட்பதற்காக, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தமிழக மீனவர்களுக்கு எதிராக, மனு தாக்கல் செய்தது, நான்காவது துரோகம். தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீடை குறைத்தது, ஐந்தாவது துரோகம். மருத்துவ படிப்பில், பொது நுழைவுத் தேர்வை நுழைக்க, நடவடிக்கை எடுப்பது, ஆறாவது துரோகம். தமிழகத்திற்குரிய மின்சாரத்தை, மத்திய மின் தொகுப்பில் இருந்து, வழங்க மறுப்பது, ஏழாவது துரோகம். தமிழ்நாடு அரசு, கேபிள் 'டிவி' நிறுவனத்திற்கு, அனுமதி வழங்க மறுப்பது, எட்டாவது துரோகம். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்காதது, ஒன்பதாவது துரோகம். விலைவாசி உயர வழிவகுத்தது, 10வது துரோகம். பாடம்: மத்தியில் உள்ள, காங்., தலைமையிலான கூட்டணி அரசு, தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, தமிழக அரசுக்கும், துரோகம் இழைத்துள்ளது.
மாநிலத்தின் அதிகாரங்களை பறித்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் உரிமையில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட காங்., கட்சிக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த, தி.மு.க.,வுக்கும், வரும் தேர்தலில் பாடம் புகட்டுங்கள். வருகிற மக்களவைத் தேர்தல், வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இந்தியாவின் வளர்ச்சியை மாற்றி அமைக்கும் தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து, இந்தியாவை காக்கும் தேர்தல். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது தான், காங்., ஆட்சியின் தாரக மந்திரம். '2ஜி' ஸ்பெக்ட்ரம், ஹெலிகாப்டர், நிலக்கரி, காமன்வெல்த் விளையாட்டு என, ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலை, முன்னின்று நடத்தியது, தி.மு.க., என்பதை மறந்துவிடாதீர். இப்படிப்பட்ட ஊழல் அரசை, ஆட்சியிலிருந்து தூக்கி எறிவது, அனைவருடைய கடமை. மத்திய அமைச்சரவையில், 17 ஆண்டுகள் அங்கம் வகித்து, தமிழகத்திற்கு எதையும் செய்யாத, தி.மு.க.,விற்கு, தேர்தலில், நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். மத்தியில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையை, அ.தி.மு.க.,விற்கு, நீங்கள் வழங்க வேண்டும். வளமான வல்லரசு, வலிமையான நல்லரசு, என்ற நிலையை, பாரதம் எய்த, ஆதரவு அளியுங்கள். உங்கள் ஓட்டை, தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் பயன்படுத்துங்கள். இந்திய நாட்டை காப்பாற்றுங்கள். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக