திங்கள், 3 மார்ச், 2014

தென்சென்னையில் குஷ்பு போட்டி? திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று முடிகிறது.


திமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதிநாளில் சென்னையின் மூன்று தொகுதிகளுக்கும் புதுவைக்கும் நேர்காணல் நடக்க உள்ளது.
புதுவை உள்பட 40 தொகுதிகளுக்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை பெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளுக்கு நேர்காணல் அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக தலைவர் கருணாநிதி, கண் வலி காரணமாக சிகிச்சையில் இருந்ததால் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு மாலையில் நடந்தது.
இன்று காலை வடசென்னை, மத்திய சென்னைக்கும், மாலையில் தென் சென்னை மற்றும் புதுவைக்கும் நேர்காணல் நடக்கிறது. மத்திய சென்னையில் தயாநிதி மாறனே மீண்டும் வேட்பாளராவார் எனத் தெரிகிறது. தென் சென்னையில் நடிகை குஷ்பு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்துள்ளார். அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வடசென்னை தொகுதிக்கு மீண்டும் டி.கே.எஸ்.இளங்கோவன் மனு செய்துள்ளார். ஆனால், இம்முறை வடசென்னையில் திமுக சார்பில் புதிய வேட்பாளர் நிறுத்தப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக