திங்கள், 3 மார்ச், 2014

இந்தியாவில் 70 பெரும் கோடீஸ்வரர்கள்: நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி ! Why and How?

டெல்லி: இந்தியாவில் 70 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளார்களாம். அதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தான் பணக்கார இந்தியராம். சீனாவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹுருன் 2014ம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் யார், யார் எந்தெந்த இடத்தில் உள்ளனர் என்று பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் 68 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பெர்க்ஷயர் ஹாத்தவேயின் வாரன் பஃபெட் 64 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 41வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் அவர் தான் பணக்கார இந்தியர் ஆவார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் லக்ஷ்மி மிட்டல் 49வது இடத்திலும், சன் பார்மசுட்டிகல்ஸின் திலிப் சங்வி மற்றும் விப்ரோவின் ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் 77வது இடத்திலும், டாடா சன்ஸின் பலோன்ஜி மிஸ்ட்ரி மற்றும் எஸ்.பி. இந்துஜா அன்ட் பேமிலி 93வது இடத்திலும் உள்ளனர்.
70 பெரும் கோடீஸ்வரர்களுடன் இந்தியா 5வது பணக்கார நாடாக உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் 53 பெரும் கோடீஸ்வரர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
tamil.oneindia.in  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக