வியாழன், 20 மார்ச், 2014

பரிதி இளம்வழுதி : இன்று அழகிரி... நாளை கருணாநிதி ! இப்போது ஸ்டாலின் திமுகதான் உள்ளது

ஸ்டாலினால் வஞ்சிக்கப்பட்டு, திமுகவிலிருந்து வெளியேறக்கூடிய சூழல் எனக்கு உருவாக்கப்பட்டது. நேற்று நீ, இன்று நான், நாளை யாரோ என்பதுபோல, நேற்று நான் (பரிதி), இன்று அழகிரி, நாளை கருணாநிதி. திமுகவின் கைப்பாவையாக கருணாநிதி மாறிவிட்டதாக அழகிரி கூறுகிறார். நாசூக்காகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அழகிரி இப்படிச் சொல்கிறார். ஆனால் உண்மையில் அண்ணா உருவாக்கிய திமுகவோ, கருணாநிதி வளர்த்த திமுகவோ, ஒத்து ஊதும் அன்பழகன் வளர்த்த திமுகவோ இப்போது இல்லை. ஸ்டாலின் திமுகதான் உள்ளது. அதன் கைப்பாவையாகத்தான் கருணாநிதி உள்ளார்.
திமுகவை எதிர்த்து முதல் முறையாகப் பிரசாரம் செய்கிறீர்கள். களநிலவரம் எப்படி உள்ளது?
முதல்வர் ஜெயலலிதாவின் அமைதி, வளம், வளர்ச்சி என்ற மூன்று தாரக மந்திரங்கள் மக்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்.
மு.க.ஸ்டாலினுடனான பிரச்னையால் திமுகவிலிருந்து நீங்கள் வெளியேறினீர்கள். இப்போது அழகிரியும் வெளியேற்றப்பட்டுள்ளாரே?
ஸ்டாலினால் வஞ்சிக்கப்பட்டு, திமுகவிலிருந்து வெளியேறக்கூடிய சூழல் எனக்கு உருவாக்கப்பட்டது. நேற்று நீ, இன்று நான், நாளை யாரோ என்பதுபோல, நேற்று நான் (பரிதி), இன்று அழகிரி, நாளை கருணாநிதி. திமுகவின் கைப்பாவையாக கருணாநிதி மாறிவிட்டதாக அழகிரி கூறுகிறார். நாசூக்காகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அழகிரி இப்படிச் சொல்கிறார். ஆனால் உண்மையில் அண்ணா உருவாக்கிய திமுகவோ, கருணாநிதி வளர்த்த திமுகவோ, ஒத்து ஊதும் அன்பழகன் வளர்த்த திமுகவோ இப்போது இல்லை. ஸ்டாலின் திமுகதான் உள்ளது.
அதன் கைப்பாவையாகத்தான் கருணாநிதி உள்ளார். என்னைப் பொருத்தவரை தற்போதைய நிலையில் திமுக என்பது தேய்ந்துபோன லாடம். திமுகவால் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
அழகிரி உங்களைத் தொடர்பு கொண்டாரா?
இப்போது தொடர்பு கொள்ளவில்லை. அதிமுகவில் நான் சேர்ந்த சமயம், அழகிரியிடம் இருந்து தொடர்ந்து போன் வந்தது. முரட்டு சுபாவக்காரர். திட்டுவாறே என்று பயத்தில் போனை எடுக்காமலே இருந்தேன். பிறகு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று போனை எடுத்தேன். நான் எதிர்பார்த்ததுக்கு மாறாக அவரிடம் இருந்து வந்த முதல் வார்த்தையே, நல்ல முடிவு எடுத்தாய். நல்ல இடத்துக்குப் போயிருக்கிறாய். என் இதயபூர்வமான வாழ்த்துகள் என்று கூறினார். அதன் பிறகு சில பல விஷயங்ககளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஸ்டாலினுக்கு கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. கட்சியைக் கைப்பற்றிவிட்டார். திமுகவின் அறக்கட்டளையைக் கைப்பற்றிவிட்டார். எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரைத்தான் ஸ்டாலின்கூட வைத்திருப்பார். ஏனெனில் இவர்கள் இருவருக்கும்தான் 2 ஜி
அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பல ரகசியங்கள் தெரியும் என்று அழகிரி கூறினார். 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஆ.ராசாதான் கதாநாயகன் என்றாலும், கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் கருணாநிதி. அதன் தயாரிப்பாளர் தயாநிதிமாறன்தான்.
ஸ்டாலின் பிரசாரம் எப்படி?
முதல்வராக வேண்டும் என்ற வெறி ஸ்டாலினுக்கும், அவர் மனைவிக்கும் கண்ணை மறைக்குது. ஸ்டாலின் மக்களைச் சுத்தி வருகிறார். அவர் மனைவி கோயிலை சுத்தி வருகிறார். டீ கடையில் ஸ்டாலின் டீ குடித்ததாகச் செய்தி படித்தேன். இப்போது இருக்கும் பதவி வெறியில் மண்சோறுகூட சாப்பிடுவார். திமுக மாநாடு நடத்தினர். அந்த மாநாட்டில் தொண்டன்கூட இணைந்தா ஸ்டாலின் டீ குடித்தார். தேர்தலுக்காக ஊரை ஏமாற்றுவதற்காக டீ கடையில் டீ குடித்துள்ளார்.
விஜயகாந்த் பிரசாரம் எப்படி?
அழகிரி கூறியதைப்போல விஜயகாந்த்தையெல்லாம் ஒரு தலைவராகவே நம்மால் ஜீரணிக்க முடியாது. பிரசாரத்தில் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் புரியவில்லை.
நமக்கும் புரியவில்லை. நாமக்கல் தொகுதியின் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், நான் நிற்கவே மாட்டேன் என்று புறமுதுகிட்டு ஓடிவிட்டார்.
ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லாதபோது யார்தான் தேர்தலில் நிற்பார்கள்?
ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பலர் இவரை விட்டு, விலகி, முதல்வரைச் சந்தித்து தொகுதிகளுக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்கின்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன் பதவியே வேண்டாம் என்று எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இந்தச் சூழலில் பாஜகவுக்கு வேறு வழியே இல்லாததால், ஒரு கொடியையாவது பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதால் தேமுதிகவைப் பிடித்துக் கொண்டனர் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக