மேட்டூர் தங்கவேல்
இந்தியா சுதந்தரம் பெற்ற நாள் தொடங்கி இதுவரை எந்தக் கட்சியும் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன்பே அறிவித்து வாக்குகள் சேகரித்ததில்லை. ஒரு ஜனநாயகத்தில் இதுதான் பொதுவான நடைமுறை. தங்கள் பிரதம மந்திரி யார் என்பதை வாக்களிக்கும் மக்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். அதுதான் சரியான முறையும்கூட.
அதனாலேயே காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் அறிவித்து தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. இப்போதும் அதைத்தான் செய்திருக்கிறது.
ஆனால் பாஜக அந்த முறையை மாற்றி ஒரு சர்வாதிகார தேசத்தில் நடப்பது போன்று பிரதமர் வேட்பாளாரை முன்னிறுத்தி வாக்கு கேட்டு வருகிறது. மக்கள்மீது அக்கறையில்லாத, மக்களாட்சியின்மீது அக்கறையில்லாத ஒரு கட்சியால்தான் இப்படிச் செய்யமுடியும்.
இதுவரை பதவி வகித்த எந்தப் பிரதமர் மீதும் கலவரங்களுக்குத் துணை போனதற்கான வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
மத, இன உணர்வுகளை எந்தவொரு பிரதமரும் இதுவரை தூண்டிவிட்டதில்லை. ஆனால் பாஜகவின் பிரதம மந்திரி வேட்பாளரின் களமான குஜராத்தில் மத மோதல்கள் ஏற்பட்டு, அப்பாவி இந்துக்களும் இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மோடியின் நிர்வாகம் செயலற்று அல்லது செயல்பட மறுத்து அமைதி காத்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை பாஜக தனது வேட்பாளராக எதற்கு முன்னிறுத்தவேண்டும்?
தனது கட்சியின் கொள்கைகளை முன்னிறுத்தி வாக்கு கேட்பதற்குப் பதில் தனியொரு நபரை வைத்து வாக்கு வேட்டை நடத்துகிறது பாஜக.
மோடி தன்னையே கட்சியாக கருதி நடந்துகொள்வது அப்பட்டமாகத் தெரிகிறது. நாங்கள் என்றுகூட அவர் சொல்வதில்லை, நான் என்றே முழங்குகிறார். இப்படிப்பட்ட ஒருவரால் எப்படி வேற்றுமையை ஒன்றுபடுத்தி தேசத்தை ஆளமுடியும்?
மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, கடந்த 15 வருடங்களாகக் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம் தனது கூட்டணியை முறித்துக்கொண்டது.
வெளிப்படையாக பாசிஸத்தைக் கடைபிடிக்கும் மகாராஷ்ராவின் நவ் நிர்மான் சேனாவுடன் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. மத உணர்வைத் தூண்டிவிடும் சிவ சேனாவுடனும் கைகோர்த்துள்ளது. இந்த மதவாதக் கூட்டணியையா நாம் ஆட்சியில் அமர்த்தவேண்டும்?
பாஜக தலைமையிலான இத்தகைய கூட்டணி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அல்ல, வீழ்ச்சிப் பாதையில்தான் அழைத்துச் செல்லும். அப்படியொரு நிலைமை வராமல் தடுக்கவேண்டியது நம் கடமை. tamilpaper.net

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக