சனி, 8 மார்ச், 2014

ஆஷிகி 2 ஹீரோ மீது தமன்னா புகார்

சென்னை:புதுமுகம் நடித்த வேடத்தில் தமன்னாவை நடிக்கவைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஹீரோ. இதனால்  ஹீரோ மீது புகார் கூறி உள்ளார் தமன்னா.பாலிவுட்டில் ‘ஆஷிகி 2 படம் வெளியாகி சக்கை போடு போட்டது. இதில் ஆதித்ய ராய் கபூர், ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான சச்சின் ஜோஷி பெற்றிருக்கிறார். இந்தியில் ஆதித்யா ஏற்ற வேடத்தை சச்சின் ஏற்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவை தேர்வு செய்ய பட குழுவினர் ஆலோசனை கூறினார்கள். அதை சச்சின் ஏற்க மறுக்கிறார். ஷ்ரத்தா கதாபாத்திரத்துக்கு தமன்னா பொருத்தமாக இருக்க மாட்டார் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘ஷ்ரத்தாபோல் இப்படத்திலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு புதுமுகம் இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும். தமன்னா ஏற்கனவே ஸ்டார் அந்தஸ்தில் உள்ளவர். அது இந்த கதாபாத்திரத்துக்கு மைனஸாக இருக்கும். ஆனாலும்
இறுதிமுடிவை இயக்குனரிடம் விட்டுவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி தமன்னா கூறும்போது, படத்தில் நடிக்க என்னிடம் கால்ஷீட் கேட்டார்கள். ஏற்கனவே கைநிறைய படங்களுடன் நடித்துக்கொண்டிருப்பதால் இப்படத்துக்கு கால்ஷீட் தர முடியாத நிலையில் இருப்பதாக கூறி வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். அந்த கோபத்தில்தான் குறிப்பிட்ட கதா பாத்திரத்துக்கு நான் பொருந்த மாட்டேன் என்று சச்சின் சொல்லி இருக்கிறார்ÕÕ என்று புகார் கூறியுள்ளார். .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக