ஞாயிறு, 9 மார்ச், 2014

கேரள பெண்கள் இரவு 7-க்குள் வீட்டுக்கு சென்று விட வேண்டும் ? ரீமா கல்லிங்கல் கிண்டல்

திருவனந்தபுரம் : ‘ஷீலா தீட்சித் கேரள கவர்னராக வர உள்ளதால், கேரள பெண்கள் அனைவரும் இரவு 7 மணிக்குள் வீட்டுக்கு சென்று விட வேண்டும்‘ என்று பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரீமா கல்லிங்கல். ‘ரிது‘, ‘ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்‘, ‘கம்மத் அன்ட் கம்மத்‘, ‘நித்ரா‘ உட்பட ஏராளமான படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் ‘யுவன் யுவதி‘ படத்தில் நடித்துள்ளார்.இவர் தனது பேஸ்புக்கில் கேரளாவில் அடுத்த வாரம் புதிய கவர்னராக பொறுப்பேற்க உள்ள ஷீலா தீட்சித்தை கிண்டல் செய்து வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், ‘இரவில் பெண்கள் தனியாக நடமாடுவதால் தான் இதுபோன்ற பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, இரவு 7 மணிக்குள் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விட வேண்டும்’ என கூறியிருந்தார்.ஷீலா தீட்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தற்போது, ஷீலா தீட்சித் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 11ம் தேதி கவர்னராக பொறுப்பேற்கிறார்.இந்நிலையில், நடிகை ரீமா கல்லிங்கல் தனது பேஸ்புக்கில், ‘ஷீலா தீட்சித் நமது மாநிலத்திற்கு கவர்னராக வர உள்ளார். எனவே கேரள பெண்கள் அனைவரும் இரவு 7 மணிக்குள் வீட்டுக்கு சென்று விட வேண்டும்‘ என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய கருத்து கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவர்னராக பொறுப்பேற்க உள்ள ஷீலா தீட்சித்தை ரீமா கல்லிங்கல் கிண்டல் செய்ததற்கு காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக