சனி, 8 மார்ச், 2014

239 பயணிகளுடன் வியட்நாம் கடலில் விழுந்து நொறுங்கியது மலேசிய விமானம்!


கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை பெய்ஜிங் நோக்கி புறப்பட்டு காணாமல் போன விமானம் கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் 12 ஊழியர்கள் மற்றும் 227 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போனது. இந்த நிலையில் விமானம் வியாட்நாம் அருகே விபத்தில் சிக்கியுள்ளதாவ மலேசிய நாட்டு விமானத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கூறியதாவது:  மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் வியட்நாமின் கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு படகுகளில் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 227 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 239 பேர் இருந்ததாக மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதில் 5 இந்தியர்கள் இருந்தாக ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 239 பயணிகளுடன் வியட்நாம் கடலில் விழுந்து நொறுங்கியது மலேசிய விமானம்! விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் நிலை என்ன என்பது பற்றி தகவல்கள் தெரியாத காரணத்தால் அவர்களின் உறவினர்கள் கலக்கமடைந்துள்ளனர். 150 சீனர்கள் பயணம்  விமானத்தில் இருந்த பயணிகளில் 150 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என சீனா அறிவித்துள்ளது. மேலும், காணாமல் போன விமானம் சீன வான்வழி போக்குவரத்து மேலாண்மை துறையுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை என சீனாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக