திங்கள், 24 பிப்ரவரி, 2014

காங்கிரசுடன் இணைகிறது TRS கட்சி?சோனியாவுடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு

புதுடில்லி:தெலுங்கானா மசோதா நிறைவேறியதால்,டி.ஆர்.ஆஸ்., கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்க அதன் தலைவர் சந்திரசேகர்ராவ் விரும்பி, டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்தார்.இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.டில்லியில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை கட்சி தலைவர் சோனியாவை சந்தித்து பேசியபோது,தெலுங்கானா மாநிலம் அமைந்தால் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க தயாராக இருப்பதாக அதன் தலைவர் சந்திரசேகர் ராவ் சொல்லியிருந்ததாக மத்திய அமைச்சர் சத்தியநாராயணா தெரிவித்திருந்தார். தற்போது தெலுங்கானா மசோதா நிறைவேறியதால் அவர் காங்கிரசில் இணைந்துவிடுவார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் டில்லியில் சோனியாவை டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் நேற்று சந்தித்துப் பேசினார். இதனால் தேர்தல் கூட்டணி ஏற்பட்டிருக்கலாம்.இந்நிலையில் மார்ச் முதல்வாரத்தில் சட்டமன்ற தேர்தல் அட்டவணை மற்றும் கால அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிடப்படலாம். அதற்குள் தேர்தல் அட்டவணை தயாரித்தல் மற்றும் இணைப்பு விவாதங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்நிலையில் சோனியாவை சந்தித்து பேசிய பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய சந்திரசேகர் ராவ், அரசியல் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்றும் தெலுங்கானா மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவிக்க சென்றதாக தெரிவித்திருந்தார். பத்து ஆண்டு போராட்டம்: சந்திரசேகர் ராவ். ஆரம்ப காலத்தில் தெலுங்கு தேசம் கட்சியில்தான் இருந்தார்.2001க்கு பிறகு டி.ஆர்.எஸ்., கட்சியை துவக்கி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்.தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரிக்கை வலியுறுத்தி 10 ஆண்டுகளாக போராடினார். 2004ல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஐ.மு., அரசின் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.பின்னர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் தெலுங்கு தேச கட்சியுடன் சேர்ந்து 2009ல் தேர்தலை சந்தித்தார். இதில் அவரது கட்சி சரிவை சந்தித்தது.இதில் லோக்சாபாவில் 2 இடங்களும் மாநில சட்டசபையில் 10 இடங்களும் தான் வெற்றி கிட்டியது.தற்போதைய நிலையில் சோனியாவுடன் சந்தித்தது காங்கிரஸ் கட்சியுடன் இணைவது குறித்துதான் அவர் பேசியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக