திங்கள், 24 பிப்ரவரி, 2014

AAP கெஜ்ரிவால் : மோடியும், ராகுல் காந்தியும் அம்பானியின் சட்டைப்பையில் உள்ளனர்


ஜன் லோக்பால் மசோதா நிறைவேறாததால் டெல்லி முதல்–மந்திரி பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகினார். இதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரச்சாரம் செய்ய கெஜ்ரிவால் கிளம்பிவிட்டார்.
அரியானா மாநிலம் ராக்தாக்கில் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்; கியாஸ் விலை உயர்வு விவகாரம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தங்களது நிலையை வெளிபடுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினேன். அவர்கள் பதில் அளிக்க வில்லை. உங்களால் எப்படி பதில் அளிக்க முடியும்?. நான் முகேஷ் அம்பானிக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்தேன். நரேந்திர மோடி எத்தனை விமானங்கள் வைத்துள்ளார். அவை அனைத்து முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது என்று சிலர் சொல்கிறார்கள்
மோடி வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதாக கூறுகிறார். நான் முகேஷ் அம்பானியின் சுவிஸ் பேங்க் கணக்கு எண்ணை தருகிறேன். பாரதீய ஜனதாவில் நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மீடியாக்களே நரேந்திர மோடியை பெரிது படுத்துகின்றன. நரேந்திர மோடியின் பிரச்சாரத்திற்கு ரூ. 50 கோடி செலவு செய்யப்படுகிறது. அதனை முகேஷ் அம்பானி கொடுக்கிறார். முகேஷ் அம்பானிக்கும் பாரதீய ஜனதாவிற்கும் என்ன தொடர்ப்பு. மோடியும், ராகுல் காந்தியும் முகேஷ் அம்பானியின் சட்டைப்பையில் உள்ளனர் என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக