ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

சென்னை Software பெண் பாலியல் வன்முறை கொலை ! Employee of Tata consultancy Chennai


CHENNAI: The body of a 24-year-old Tata Consultancy Services employee, reported  missing since last week, was recovered near Siruseri on Saturday. It was identified as that of Uma Maheshwari of Salem, who was employed in the accounts department of TCS in Siruseri, south eastern suburb of Chennai.
சென்னையில் காணாமல் போன மென்பொருள் ஊழியர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் உடல் ஒரு வாரத்திற்குப் பிறகு சிறுகேரி சிப்காட் வளாகத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் உமாமகேஷ்வரி. சென்னை மேடவாக்கத்தில் தங்கியிருந்து, சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 13ஆம் தேதி பணிக்கு சென்ற உமாமகேஷ்வரி வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கடந்த 8 நாட்களாக தேடி வந்த காவல்துறையினர், சனிக்கிழமை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள முள்வேலி பகுதியில் அழுகிய நிலையில் உமாமகேஷ்வரியின் உடலை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மகளின் உடலை கண்டு பெற்றோர்கள் கதறி அழுதனர். அப்போது அங்கிருந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த சம்பவம் சென்னையில் வேலைக்கு செல்லும் பெண்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. nakkheeran.in/ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக