ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

BJP: 8 தொகுதிகள் சம்மதித்தால் பா.ம.க. வரட்டும் !

தொகுதிப் பங்கீட்டில் முரண்டு பிடிப்பதால் பா.ம.க.வை கழற்றிவிட தயாராகி வருவதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில், 12 தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டுள்ள பா.ம.க.வுக்கு 8 தொகுதிகள்தான் கொடுக்க முடியும் என பாரதிய ஜனதா கூறிவிட்டது. இதனால், பா.ம.க. வட்டாரம் கொதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பா.ம.க. தரப்பில், “சில சமுதாயத் தலைவர்கள் கொண்ட கூட்டணியை அமைத்து 10 தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர்களையே அறிவித்துவிட்டோம். இந்தக் கூட்டணியே வலுவானதுதான் (வலு இருக்கட்டும், எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கும்?).
இந்தநிலையில்தான் கூட்டணியில் சேர பாரதிய ஜனதா எங்களுக்கு அழைப்பு விடுத்தது. இரண்டு இலக்க தொகுதிகள் வேண்டும் என பேச்சுவார்த்தையில் தெரிவித்தோம். ஆனால், தருகிறோம், தரவில்லை என எதுவும் கூறாமல் இழுத்தடித்தனர். தற்போது தே.மு.தி.க.வுடன் பேரம் பேசிக்கொண்டு எங்களுக்கு 8 தொகுதிதான் தர முடியும் எனக் கூறுகின்றனர்.

12 தொகுதிகள் கொடுத்தாலே அதில் 2 தொகுதிகளை சமுதாயத் தலைவர்களுக்கு (ஜாதி) கொடுக்க வேண்டும். ஆனால் ஒற்றை இலக்கமான 8 எனக் கூறினால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று கொற்தளிக்கின்றனர்.
பாரதிய ஜனதா எடுத்துள்ள இந்த  நிலைப்பாடால் கொதித்துப்போன அன்புமணி, “வட மாவட்டங்களில் எங்கள் கட்சி வலுவாக உள்ளது. தனியாக நின்றால்கூட 6 தொகுதிகளில் வெற்றி நிச்சயம். அதே நேரத்தில் தே.மு.தி.க. தனியாக நின்றால் ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்ற முடியுமா?. இதை நான் சவாலாகக் கூறுகிறேன்” என பாரதிய ஜனதா தலைவர்களிடம் கூறிவிட்டாராம்.
அடேங்கப்பா.. 6 தொகுதிகளில் வெற்றி நிச்சயமா? அப்படியானால், இனிமேல் அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கோரி, அப்பா டாக்டர் கட்சி கட்சியாக அலைய வேண்டியதில்லை.
பா.ம.க. இப்படி இறுக்கிப் பிடிப்பதால், பாரதிய ஜனதா புதிதாக ஒரு முடிவுக்கு வந்துள்ளதாம். “8 தொகுதிகள் சம்மதித்தால் பா.ம.க. வரட்டும். இல்லாவிட்டால் வேறு இடத்தைப் பார்த்துக்கொள்ளுட்டும்” என்பதே அந்த முடிவு.
இனி முடிவு பா.ம.க. கையில்தான் என்கின்றனர் பாரதிய ஜனதா தலைவர்கள். பா.ம.க. கழற்றிவிடுப்படுகிறதா? அல்லது கழன்று கொள்கிறதா? என்து விரைவில் தெரிந்துவிடும்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக