ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

எம்ஜிஆர் பாட்டு தெரியாத நீங்கள் எல்லாம் டீச்சரா? Rowdi மேயர் கேள்வியால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு


சென்னை: ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பரிசளிக்கும் நிகழ்ச்சி ஷெனாய் நகரிலுள்ள மாநகராட்சி அரங்கத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில், கலந்து கொண்டு மேயர் சைதை துரைசாமி,  ‘‘நல்ல நல்ல ள்ளைகளை நம்பி, ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் போன்ற எம்ஜிஆர் பாடல்களை மேடையில் பாடிகாட்டினார். மேலும், நான் பாடிய பாடலை அடி மாறாமல், வார்த்தை மாறாமால் ஆசிரியர்கள் பாட வேண்டும். அப்படி முழுபாடலையும் சிறப்பாக பாடினால் அவர்களுக்கு யி500 பரிசு வழங்கப்படும் என்று மேடையிலேயே அறிவித்தார். இதனால் சில ஆசிரியைகள் அந்த பாடல்களை பாட முயன்றனர். சில இடங்களில் சுருதி குறைந்துபோனது. சில இடங்களில் வார்த்தை மாறியது. அவர்களால் சில வரிகளுக்கு மேல் பாட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக இரட்டை அர்த்ததில் அல்ல, ஒரே அர்த்தத்தில், ‘புரட்சித்தலைவர்’ எம்.ஜி.ஆர் என்ற முதியவர் , இளம் பெண்ணின் மார்பகங்களை மாங்காயோடு ஒப்பிட்டு,
அந்தப் பெண்ணின் மார்பகங்களின் முன் கை நீட்டியும் பார்வையால் பார்த்தும் ‘காயா.. இல்லை பழமா..? கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா?’ என்று பாட்டு பாடி ஈவ்டீசிங் செய்தார்.
‘பறிச்சாலும் துணிப்போட்டு மறைச்சாலும் பெண்ணே.. பளிச்சென்று தெரியாதோ இளம் மாங்கா முன்னே..’
‘உன் புத்தி.. பெண் புத்தி.. பின் புத்தி..’
இதுவும் தலைவர் பாடியதுதான்.
*
‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.பாட்டு தெரியாத நீங்கள் எல்லாம் ஒரு டீச்சரா?’
என்று சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய சைதை துரைசாமி அவர்கள் ஆசிரியர்களுக்கான ஒரு விழாவில் பெண் ஆசிரியர்களைக் கண்டித்திருக்கிறார்.

உடனே ‘என்ன டீச்சர் நீங்க.. ஒரு எம்ஜிஆர் பாட்டு முழுமையாக தெரியவில்லை. நீங்கல்லாம் பிள்ளைகளுக்கு என்னத்த பாடம் சொல்லி கொடுக்கபோகிறீர்கள்’ என்று மேடையிலே அவர்களை கடிந்து கொண்டார். இதனால் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கொந்தளித்தனர். ‘இங்க என்ன சூப்பர் சிங்கர் போட்டியா நடக்குது. எங்களை பார்த்து டீச்சரான்னு கேள்வி கேட்கிறார்’’ என்று சக ஆசிரியர்களிடம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அந்த சலசலப்பை பொருட்படுத்தாத சைதை துரைசாமி, சில எம்ஜிஆர் பாடல்களை பாடி காண்பித்தார்.  சில ஆசிரியைகள் எம்ஜிஆர் பாடலை சரியாக பாடி காட்டினர். வாக்குறுதி அளித்தபடி மேயர், அந்த ஆசிரியைகளுக்கு தலா யி500 பரிசு வழங்கினார். பின்னர், எம்ஜிஆரின் தத்துவ பாடல்கள் கூட தெரியாமல் நீங்கள் எப்படி ஆசிரியைகளாக இருக்கிறீர்கள்.  உங்களுக்காகவே நூறு எம்ஜிஆர் பாடல்களை சிடியாக தயாரித்து கொடுக்கிறேன். முதலில் அதை பாட கற்றுக் கொள்ளுங்கள். அதன்பின் பாடத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக