திங்கள், 24 பிப்ரவரி, 2014

கர்நாடகத்தில் துர்க்கை கோவிலில் இன்றும் தேவதாசி விபச்சாரம்

கருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில்
இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர்.  கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்ற பெய ரில் படிப்பறிவில்லா மக் களை ஏமாற்றி இந்தக் கொடூரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட் டியார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் போன்றோர் நடத்திய சமூகப்போரின் காரணமாக பெண்களுக்கு ஏற்பட்ட தேவதாசி அவலம் தமிழகத் தில் இருந்து வேரோடு அழிந்து போனது. இதற்காக இன்றும் பெண்கள் தந்தை பெரியாருக்கு நன்றி தெரி விக்கின்றனர்.
ஆனால் கடந்த ஆண்டு வாய்ப்பிழந்த பெண் நடிகை ஒருவர் தேவதாசி ஆவது அவர் அவர்களது விருப்பம் என்று ஒரு கல்வி நிலையத்தில் நடந்த கருத்தரங்கில் கூறி தேவதாசி முறை என்னவோ பெண்களுக்குப் புனிதமான ஒரு சடங்கு போலவும், ஆலயங்களில் நடக்கும் புனிதப் பணியை அறியாமை காரணமாக சிலர் (பெரியார் பெயரைக்குறிப்பிடாமல்) எதிர்த்தனர்.
அவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீது பொறாமையும் மதத்தின் காழ்ப்புணர்வும் உண்டு என்று கூறியிருந்தார். இது அப்போதே மிகவும் சல சலப்பை ஏற்படுத்தியது. அவரின் ஆபாசமான கூற்றை உச்சநீதிமன்றமே ஓங்கி அறைந்து தேவதாசி முறை இந்த நாட்டின் மிகப் பெரிய அவமானம் என்று கூறி இருக்கிறது.
     கருநாடக மாநிலம் ஹரப்பனல்லி வட்டத்தில் உத்தரங்கமல  அடிவிமல நகரி என்ற பகுதியில் உள்ள துர்க்கை கோவிலில் இன் றும் தேவதாசி முறை நடந்து வருகிறது. இது குறித்து பல முறை அரசுக்குத் தெரியப் படுத்தியும் இது கலாச்சார பழக்கம்; இது திருவிழா அன்று மாத்திரம் நடக்கும் விழாவாகும் இதனால் யாரும் பாதிக்கபடவில்லை என கூறி நகர நிர்வாகமும் இந்தச் கோவில் தேவதாசி விழாவை சிறப்பாக நடத்தி வந்தது.     போராடும் உளியம்மா
இந்தக் கோவிலின் முதிய தேவதாசியான உளி யம்மா என்பவர் நீண்ட காலமாக இந்தப் பழக்க வழக்கத்திற்கு எதிராக போராடி வந்தார். ஆனால் நகர நிர்வாகம் மற்றும் பிர பலங்களின் தலையீடு கார ணமாக அவரால் எதுவும் செய்யமுடியாமல் இருந்தது. இந்த நிலையில் சோசியல் லைஃப் என்ற பொது நல அமைப்பு உளியம்மா விற்கு உதவமுன்வந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எஸ் எல் பவுண்டே சன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய் தது  அதில் உதரங்கமல துர்க்கையம்மன் கோவிலில் நடந்து வரும் பாரம்பரிய தேவதாசி முறையையும்  சின்னாபின்னமாக்கப் படும் பெண்களின் வாழ்க் கைப் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது.
உச்சநீதிமன்றம் சாட்டை!    சமூகத்தின் மிகவும் கொடிய பழக்கமாக இன் றும் தொடரும் இந்த அவ லத்தை அறிந்ததும், உச்சநீதி மன்றமே ஒருமுறை அதிர்ந்து போனது, தேவதாசியாக மாற்றப்படும் விழா (13.02.14) அன்று இரவு நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றம் நீதிபதி சதாசிவம் தலைமையில் இந்த மனுவை விசார னைக்கு எடுத்துக்கொண்டு இந்த மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட உத்தரவை வழங்கியுள்ளார்;
இந்த சம்பவம் குறித்து கருநாடக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவில் குறிப் பிடப்படுவதாவது : இந்த நூற்றாண்டிலும் தேவதாசி முறை தொடர்கிறது என் பது இந்திய நாட்டிற்கு ஒரு அவமானச் சின்னமாகும், இந்த சம்பவம் பற்றி உட னடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் நடைபெறுவ தைத் தடுத்து இதனால் பாதிக்கப்பட்ட பெண் களை மீட்க நடவடிக்கை எடுக்க கூறியும், இதற்கு முன்பான பதிவு செய்யப் பட்ட வழக்குகள் பற்றியும் விவரம் கேட்டுள்ளது.   சமூக நீதிக்கான கி.வீர மணி விருதுவழங்கும் விழாவில் மராட்டிய மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன் புஜ்பால் கூறியதை இங்கு மீண்டும் நினைவு கூர்கி றோம். சமூகத்தில் பெண் கள் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் இன் றளவு குறைந்த பாடில்லை, இதனை களைய இன்றும் பெரியார் இந்தியா முழு வதும்  தேவைப்படுகிறார் என்று கூறினார். இன்று உச்சநீதிமன்றத்தின் உத்தர வின் படி அவரின் வார்த்தை உண்மையானது.
இப்பொழுதுள்ள கரு நாடக முதல் அமைச்சர் சித்தாராமையா பகுத்தறிவு வாதி அவர் தலையிட்டு இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டுவார் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.
viduthalai.in  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக