திங்கள், 24 பிப்ரவரி, 2014

அமெரிக்கா: இந்தியப் பெண் மர்ம சாவு ! காணாமல் போன, இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்காவில், காணாமல் போன, இந்திய வம்சாவளி பெண், மர்மமான முறையில், காரில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின், பிலடெல்பியாவில் வசித்தவர் நாடியா மாலிக், 22. இவருடைய காதலர், பூபிந்தர் சிங், 25. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். மருந்தாளுனர் பட்ட படிப்பு படித்து வந்தார் நாடியா. நாடியாவும், பூபிந்தர் சிங்கும் கருத்து வேறுபாடால், பிரிந்து விட்டனர். அமெரிக்கா: மாயமான இந்தியப் பெண் மர்ம சாவு இந்நிலையில், "கடந்த, 10ம் தேதி முதல், நாடியா வீடு திரும்பவில்லை' என, அவரது உறவினர்கள், போலீசில் புகார் செய்தனர்.
நாடியாவின் காதலர், பூபிந்தர் சிங் மீது சந்தேகம் எழுந்ததால், ஓஹியோ மாகாணத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பிலடெல்பியா ரயில் நிலையம் அருகே, கேட்பாரற்று கிடந்த காரில், நாடியாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், பல நாட்களாக பனி கொட்டுவதால், இந்த கார் மீது பனி துகள்கள் மூடி கிடந்தன. இதனால், காரின் உள்ளே இருந்த நாடியாவின் சடலத்தை போலீசார் கவனிக்கவில்லை. அதிக நேரம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால், அந்த காருக்கு, போலீசார் அபராதம் விதித்து கொண்டிருந்தனர். நாடியா கொல்லப்பட்டரா என்பது குறித்து, பூபிந்தர் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக