சனி, 22 பிப்ரவரி, 2014

ஜெயலலிதா பிறந்த நாள் பேனர்: அகற்றக்கோரி நடுரோட்டில் படுத்த டிராபிக் ராமசாமி Photos


ஜெயலலிதா வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையொட்டி கடற்கரை சாலை முழுவதும் அதிமுகவினர் பெரிய பெரிய பேனர்களை வைத்திருந்தனர். சனிக்கிழமை காலை திடீரென்று கடற்கரை சாலை காந்தி சிலை அருகே வந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, பேனர்களை அகற்ற கோரி திடீரென சாலையின் நடுவே படுத்து மறியல் செய்தார்.
இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் அவரை எழுந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். பேனரை அகற்றினால்தான் போவேன் என்று டிராபிக் ராமசாமி கூறினார்.
அதற்கு, எழுந்து செல்லுங்கள் நாங்கள் எடுக்கச் சொல்லுகிறோம் என்றனர் போலீசார். ஆனால் பேனரை எடுக்கும் வரை போக மாட்டேன் என்று சாலையின் நடுவே படுத்திருந்த டிராபிக் ராமசாமி கூறினார்.
போலீசார் வேறு வழியில்லாமல் ஆட்களை அழைத்து வந்து பேனர்களை அகற்றினர். அதன் பின்னர் டிராபிக் ராமசாமி மறி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக