செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

7வது நாளாக நர்சிங் மாணவிகள் போராட்டம் நோயாளிகள் பாதிப்பு

கீழ்பாக்கம்:கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகள் 7வது நாளாக இன்று போராட்டத்தை தொடர்கின்றனர். தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடப்பதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ கல்வித் துறை இயக்குனர் டாக்டர் கீதாலட்லசுமி ஆகியோர் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. நர்சிங் கல்லூரி மாணவிகளின் தரப்பில் திவ்யா, மோனிகா மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


இந்த பேச்சுவார்த்தையில் முதலில் உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகளின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக மாணவிகள் தெரிவித்தனர். ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் என்று பெரும்பாலான மாணவிகள் கூறினர். அதனால் போராட்டத்தை தொடர்ந்தனர்.

அமைச்சர்கொடுத்த உறுதிமொழி மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம் கேட்டதை மாணவிகள் ஏற்கவில்லை. இதனால் இன்று 7வது நாளாக மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கீழ்பாக்கம் அரசு செவிலியர் பயிற்சி மாணவிகள் 290 பேர் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் இன்று கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்."> இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவிகள் தங்கள் கோரிக்கையை தொடர்ந்து கோஷமிட்டு வலியுறுத்தி வருகின்றனர். 

இவர்களோடு இணைந்து இந்திய மாணவர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலூர், தஞ்சை, நாகை, கடலூர், நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் நர்சிங் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.நர்சிங் மாணவிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் இதை முடிவுக்கு கொண்டு வர அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. - See more at: http://www.tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக