திங்கள், 10 பிப்ரவரி, 2014

யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் பெண்ணை திருமணம் ! 5 வேளை தொழுகிறார்.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார். யுவன்சங்கர் ராஜா பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். யுவன்சங்கர் ராஜா, சுஜயா என்ற பெண்ணை முதலில் காதல் திருமணம் செய்தார். கருத்துவேறுபாடு காரணமாக இரண்டுபேரும் பிரிந்துவிட்டார்கள். சுஜயா, யுவன்சங்கர் ராஜாவிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு வெளிநாடு போய்விட்டார். 2–வது திருமணம் அதன்பிறகு யுவன்சங்கர் ராஜா ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இரண்டுபேரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. முஸ்லிமாக மாறினார் இந்தநிலையில், யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார். குரான் படிக்கிறார். தாடியும் வளர்த்துவருகிறார். யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘நான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டேன். ஆனால், மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், யுவன்சங்கர் ராஜா, மூன்றாவதாக முஸ்லிம் பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.ணை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக